சிறுமியை நாசம் செய்த வழக்கு: 8 பேருக்கு ஆயுள் தண்டனை: 13 பேருக்கு 20 ஆண்டு சிறை

Updated : செப் 26, 2022 | Added : செப் 26, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
சென்னை: சென்னையில், 13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, நாசம் செய்த வழக்கில், 8 பேருக்கு ஆயுள் தண்டனையும், 13 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையை விதித்து, இன்று(செப்.,26) போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர், 2020ல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தன், 13 வயது மகளை, தன் அக்கா மகளும், அவரது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: சென்னையில், 13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, நாசம் செய்த வழக்கில், 8 பேருக்கு ஆயுள் தண்டனையும், 13 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையை விதித்து, இன்று(செப்.,26) போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




latest tamil news


சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர், 2020ல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தன், 13 வயது மகளை, தன் அக்கா மகளும், அவரது கணவரும் சேர்ந்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, வன்கொடுமை செய்ததாக கூறியிருந்தார்.இச்சம்பவம் குறித்து, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.



latest tamil news



சிறுமியின் உறவினர்கள், எண்ணுார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புகழேந்தி, 45, பா.ஜ., வட சென்னை மாவட்ட பிரமுகர் ராஜேந்திரன், 44, உட்பட 26 பேர் மீது, பாலியல் வன்முறை தொடர்பான, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.


குற்றம் சாட்டப்பட்ட, 26 பேரில், 22 பேரை, போலீசார் அடுத்தடுத்து கைது செய்து, சிறையில் அடைத்தனர்; நான்கு பேர் தலைமறைவாகினர். மீதமுள்ள, 22 பேர் மீதான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் நடந்து வந்தது.


விசாரணையின் போது, ஒருவர் இறந்தார்.அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின், இந்த வழக்கில், சிறுமியின் உறவினர்கள், எண்ணுார் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, பா.ஜ., வடசென்னை மாவட்ட பிரமுகர் ராஜேந்திரன் உட்பட, 21 பேரும் குற்றவாளிகள் என, நீதிபதி தீர்ப்பளித்தார்.



latest tamil news



கடந்த செப்.,19ம் தேதி நீதிபதி ராஜலட்சுமி உடல்நலக்குறைவு காரணமாக விடுப்பில் சென்றுள்ளதால் வழங்கப்படவிருந்த தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.



தீர்ப்பு:


இந்த வழக்கு இன்று(செப்.,26) விசாரணைக்கு வந்தது. அப்போது, 8 பேருக்கு ஆயுள் தண்டனையும், 13 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையை விதித்து, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
26-செப்-202223:46:27 IST Report Abuse
Mohan கருத்து பதிவு செய்பவர்களுக்கே எந்த குற்றத்துக்கு என்ன தண்டனை கொடுக்கவேண்டுமென தெரிகிறபோது மன்றத்தில் உள்ளவர்களுக்கு நீதி தெரியவில்லையே. மரத்தடி நீதியே பரவாயில்லையோ
Rate this:
Cancel
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
26-செப்-202221:22:35 IST Report Abuse
naadodi மரண தண்டனை தவறே இல்லை, இந்த மாதிரி ஆளுங்களுக்கு.
Rate this:
Cancel
26-செப்-202220:45:26 IST Report Abuse
அப்புசாமி ஒருத்தனையாவது தூக்கில் போட்டிருந்தா நியாயம் கிடைச்சதுன்னு வெச்சுக்கலாம். திருட்டு ரடியனுங்க அடுத்த அண்ணா பொறந்தநாளுக்கு வந்துருவாங்க. நீதிமனம் மேலே நமக்கு நம்பிக்கை க்ய்றையுது. கிரிமினல்ஜளுக்கு நம்பிக்கை அதிகமாகுது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X