'ஜனநாயக ஆசாத் கட்சி' துவக்கிய குலாம் நபி

Updated : செப் 26, 2022 | Added : செப் 26, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
ஜம்மு: காங்கிரசில் இருந்து விலகிய ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், புதிய கட்சியை துவக்கினார். 'ஜனநாயக ஆசாத் கட்சி' எனப் பெயரிட்டுள்ள குலாம் நபி, கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தினார்.ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத், சமீபத்தில் காங்கிரசில் இருந்து வெளியேறினார்; தனிக் கட்சி துவக்கப் போவதாக அவர்
Kashmir, Ghulam Nabi Azad,  Democratic Azad Party, குலாம் நபி ஆசாத், ஜனநாயக ஆசாத் கட்சி, ஜம்மு, காஷ்மீர், Political Party, Jammu and Kashmir,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஜம்மு: காங்கிரசில் இருந்து விலகிய ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், புதிய கட்சியை துவக்கினார். 'ஜனநாயக ஆசாத் கட்சி' எனப் பெயரிட்டுள்ள குலாம் நபி, கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தினார்.ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத், சமீபத்தில் காங்கிரசில் இருந்து வெளியேறினார்; தனிக் கட்சி துவக்கப் போவதாக அவர் அறிவித்திருந்தார். மேலும், இது தேசிய அளவிலான கட்சியாக இருக்கும் என்றும், கட்சியின் பெயர், சின்னத்தை மக்களே முடிவு செய்வர் எனவும், தேசிய அளவில் அனைவரும் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில், ஹிந்துஸ்தானி பெயர் வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதன்படி, தனது புதிய கட்சி குறித்தான அறிவிப்பை குலாம் நபி ஆசாத் இன்று வெளியிட்டார்.latest tamil newsதனது கட்சிக்கு 'ஜனநாயக ஆசாத் கட்சி' எனப் பெயரிட்டுள்ள குலாம் நபி, கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். மஞ்சள், வெள்ளை, நீலம் ஆகிய நிறங்களுடன் கூடிய கொடியை செய்தியாளர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தினார். கட்சி அறிவிப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் குலாம் நபி ஆசாத் கூறியதாவது: எனது புதிய கட்சிக்காக உருது, சமஸ்கிருதத்தில் இருந்து சுமார் 1,500 பெயர்கள் அனுப்பியிருந்தனர். ஹிந்தி, உருது கலவையான 'ஹிந்துஸ்தானி' பெயரை வைக்க முடிவு செய்தோம். மேலும், கட்சி பெயர் ஜனநாயகமாகவும், அமைதியாகவும், சுதந்திரமாகவும் இருக்க வேண்டும்.latest tamil news


அதன்படி, எனது கட்சிக்கு 'ஜனநாயக ஆசாத் கட்சி' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. கட்சி கொடியில் உள்ள மஞ்சள் நிறம், படைப்பாற்றல், வேற்றுமையில் ஒற்றுமையை குறிக்கிறது; வெள்ளை நிறம் அமைதியை குறிக்கிறது; நீலம், சுதந்திரம், வெளிப்படை, கற்பனை மற்றும் கடலின் ஆழத்திலிருந்து வானத்தின் உயரம் வரை வரம்புகளைக் குறிக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Honda -  ( Posted via: Dinamalar Android App )
27-செப்-202210:09:45 IST Report Abuse
Honda உண்ட வீட்டிற்கு இரண்டகம் பண்ண துரோகிக்கு கட்சிவேற கேடா
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம் பேரைப் பாரு!! இந்துஸ்தானி பேராம். செல்லாது செல்லாது!! இந்த கச்சி குச்சியெல்லாம் மரத்த தமிழ்நாட்டில் போணியாகாது. எங்கள் தங்க தளபதி இந்த பெயருள்ள கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டார்கள்.
Rate this:
Cancel
RAAJAA -  ( Posted via: Dinamalar Android App )
27-செப்-202205:23:38 IST Report Abuse
RAAJAA KASHMIR ல மட்டுமே கடை திறக்கலாம்..... மற்ற இடங்களில் போனி ஆகாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X