நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது: முதல்வர் ஸ்டாலின்

Updated : செப் 27, 2022 | Added : செப் 26, 2022 | கருத்துகள் (160) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் எந்த வகையிலாவது காலூன்றி விட வேண்டும் என நினைக்கும் நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்க கூடாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த ஆட்சிக்கு எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்திட வேண்டும் என்ற தீயநோக்கம் கொண்ட சில அரசியல் சக்திகள் தொடர்ந்து பாடுபட்டுக்
DMK, Stalin, Tamilnadu, CM, திமுக, தமிழகம், முதல்வர், ஸ்டாலின், நச்சு சக்திகள், மதவெறி,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழகத்தில் எந்த வகையிலாவது காலூன்றி விட வேண்டும் என நினைக்கும் நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்க கூடாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த ஆட்சிக்கு எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்திட வேண்டும் என்ற தீயநோக்கம் கொண்ட சில அரசியல் சக்திகள் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. மறைமுகமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அந்த நச்சு சக்திகளுக்கு எந்த வகையிலும் நாம் இடம் கொடுக்காமல் நம்முடைய பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.



நம் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்எல்ஏ, எம்.பி.,க்கள் ஆகியோர் கட்சி நிகழ்ச்சிகளிலும் அல்லது பொது நிகழ்ச்சிகளிலும் பேசக்கூடிய செய்திகளை திரித்து, மறைத்து, வெட்டி - ஒட்டி, மோசடி செய்து வெளியிடக்கூடிய கூட்டத்தின் செயல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனை அந்த நச்சு சக்திகள் ஒரு தொடர் வேலையாகவே செய்து வருகின்றன. 'மானமுள்ள ஆயிரம் பேருடன் நாம் போராட முடியும். மானம் இல்லாத ஒருவருடன் போராட முடியாது' என்பது போல இங்கே இருக்கக்கூடிய சில நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம், நேர்மை என்பது துளியும் இல்லாத நிலையில் அவர்களுடன் நாம் தொடர்ந்து மல்லுக்கட்டி போராடிவர வேண்டிய அவல நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.



latest tamil news


எந்த வகையிலாவது தமிழகத்தில் காலூன்றி விட வேண்டும் என நினைக்கின்ற மதவெறி நச்சு சக்திகள் இதுபோன்ற சூழல்களை பயன்படுத்திக்கொண்டு தங்களை வளர்த்துக் கொள்ள முடியுமா என எதிர்பார்க்கின்றன. மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கி, கலகம் விளைவிக்க பார்க்கின்றன. நம்முடைய பயணம் நெடியது, நமக்கு பொறுப்பு அதிகமாக இருக்கிறது. ஆட்சி பொறுப்பு என்னும் அகப்பையை கவனமாக கையாள வேண்டிய நிலையில் இருக்கிறோம் என சொல்லியிருக்கிறேன்.



latest tamil news


சேற்றில் மூழ்கி எழுந்து வரும் உருவம் ஒன்று தன் உடலை சிலுப்புகிறது என்று, ஆற்றில் நீராடி வரும் நாமும் அதன் முன்பு சிலுப்பிக் கொண்டிருக்க முடியாது. நாம் சற்று ஒதுங்கி போய் நம்முடைய பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. பொறுப்புடன் நடப்போம், திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்ப்போம். நாம் பேசுவதைவிட, பயன்பெற்ற மக்கள் பேசுவார்கள். அவர்களே, இந்த நச்சு சக்திகளுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (160)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
30-செப்-202207:10:55 IST Report Abuse
Ravichandran Narayanaswamy பெரியார் சிலை எல்லாவற்றிலும் பெரியாரின் மரணசாசனத்தின் 21 ஆம் பக்க திமுக சான்றிதழை ஒட்டவேண்டும்-ஹிந்துக்கள் முடிந்தவரையில் இதை செய்தாலே பெரியாரை நாம் மதித்ததுபோலாகும். மக்களே, திமுகக்காரன் எதற்கு பெரியார் சிலையை அண்ணா அழிவாலயத்துக்குள் வைக்கவில்லை என்று புரிந்திருக்கும். பெரியார் திமுகவை பலமுறை கேவலப்படுத்தியிருக்கிறார்-திமுகவின் தகிடுதத்தங்களை தோலுறிச்சி காண்பித்திருக்கிறார். இருந்தும் பெரியாரை ஏன் இவர்கள் முன்னிலைப்படுத்துகிறார்கள் என்றால் திமுக எப்போதுமே யாரால் கட்சிக்கு தொல்லை வருமோ அவர்களை பக்கத்தில் வைத்துக்கொள்ளும். யாரால் தொல்லை வராதோ அவர்களை தூரத்தில் வைத்து அழகுபார்க்கும். ஆனால் இந்த முட்டாள் துலுக்கனுங்க கிறிஸ்துவனுங்க திமுக புனிதமான கட்சி என்று நம்புகிறார்கள். பெரியார் சொன்னது-காசுக்காக எவன் காலையும் கழுவி குடிப்பான்-(மரணசாசனத்தில் 47 ஆம் பக்கம்):கம்யூனிஸ்ட்காரன்
Rate this:
Cancel
Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
30-செப்-202207:03:57 IST Report Abuse
Ravichandran Narayanaswamy திமுக கவுன்சிலர்கள் ஒரு வேலையும் செய்வதில்லை. கொள்ளை அடிக்க வழி இருக்கா என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் தாம்பரம் நகராட்சிக்குட்பட்ட கிரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல் போன்ற இடங்களில் சாலைகள் குதறிவிடப்பட்டிருக்கின்றன. வேலை செய்ய தெரியாதவனிடம் கழிவுநீர் கால்வாய் வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது.
Rate this:
Cancel
Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
30-செப்-202207:03:11 IST Report Abuse
Ravichandran Narayanaswamy இதல்லவோ திராவிடமாடல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X