இந்தியா மீது பாரபட்சம்: அமெரிக்க ஊடகங்கள் மீது ஜெய்சங்கர் பாய்ச்சல்

Updated : செப் 27, 2022 | Added : செப் 26, 2022 | கருத்துகள் (30) | |
Advertisement
நியுயார்க்: அமெரிக்காவில் உள்ள செய்தி நிறுவனங்கள், இந்தியா மீது பாரபட்சம் காட்டுவதாகவும், அவர்களால் ஒருபோதும் இந்தியாவை வெல்ல முடியாது எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.ஐ.நா. பொதுசபையின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நியுயார்க் சென்றுள்ளார். அங்கு நடந்த கூட்டம்
EAM Jaishankar, American Media, Biased, Coverage, India, இந்தியா, வெளியுறவுத்துறை, அமைச்சர், ஜெய்சங்கர், அமெரிக்கா, ஊடகங்கள், பாரபட்சம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நியுயார்க்: அமெரிக்காவில் உள்ள செய்தி நிறுவனங்கள், இந்தியா மீது பாரபட்சம் காட்டுவதாகவும், அவர்களால் ஒருபோதும் இந்தியாவை வெல்ல முடியாது எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.



ஐ.நா. பொதுசபையின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நியுயார்க் சென்றுள்ளார். அங்கு நடந்த கூட்டம் ஒன்றில் அமெரிக்கா வாழ் இந்தியர்களிடம் ஜெய்சங்கர் உரையாற்றினார். அப்போது, அமெரிக்காவில் இந்தியாவிற்கு எதிரான கருத்து உடையவர்கள் அதிகரித்துவருவது குறித்த கேள்விக்கு அவர் அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான 'வாஷிங்டன் போஸ்ட்' உள்பட பல செய்தி நிறுவனங்களை மறைமுகமாக விமர்ச்சித்து கருத்து தெரிவித்தார்.



அவர் பேசியதாவது: இங்குள்ள (அமெரிக்கா) ஊடகங்களை நான் பார்க்கிறேன். அவர்களில் சிலர் இங்கிருந்து கொண்டு என்ன எழுதுகிறார்கள் என்று உங்களுக்கும் தெரியும். அதில் பாரபட்சம் உள்ளது என்பது எனது பார்வை. பாரபட்சத்திற்கான முயற்சிகளும் உள்ளன. இந்தியா எந்த அளவுக்கு அதன் வழியில் செல்கிறதோ, இந்தியாவின் பாதுகாவலர்கள், இந்தியாவின் உருவாக்குபவர்களாக கூறிக்கொள்பவர்கள் இந்தியாவில் தங்கள் நிலையை இழந்து வருகின்றனர். இதனால் இதுபோன்ற விவாதங்களை இந்தியாவிற்கு வெளியே உருவாக்குகிறார்கள்.



latest tamil news


இப்படிபட்டவர்களால் ஒருபோதும் இந்தியாவில் வெற்றி பெற முடியாது. அதனால் அவர்கள் இந்தியாவிற்கு வெளியே இருந்து இந்தியாவை தீர்மானிக்க முயல்கிறார்கள். இது மிகவும் முக்கியமான விஷயம். இதுகுறித்து நாம் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். இங்குள்ள அமெரிக்கர்களுக்கு அங்கு என்ன நடக்கிறது, அங்குள்ள சிக்கல் என்ன என்பது குறித்து தெரியாது என்பதற்காக மட்டும் நான் இதனைச் சொல்லவில்லை. நாம் ஒதுங்கி இருக்கக்கூடாது என்பதற்காகவும், நம்மைப் பற்றி மற்றவர்கள் தீர்மானிக்கக் கூடாது. அதனால் இதனை நாம் முக்கியானதாக எடுத்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
27-செப்-202215:22:12 IST Report Abuse
MARUTHU PANDIAR இவரின் ராஜ தந்திரமும், துணிச்சலும் நம் நாட்டுக்கு எத்தனையோ பெருமைகளை, நன்மைகளை பெற்றுத் தந்துள்ளன++
Rate this:
Cancel
27-செப்-202207:24:42 IST Report Abuse
அப்புசாமி இவர் பேசியதெல்லாம் அதிகார பூர்வமானதல்ல. அமெரிக்கா வாழ் இந்தியர்களிடம் கலந்துரையாடின போது பேசியது. இந்தியாவின் எதிர்ப்பு ஐ.நா வில் பேசும்போது பதிவு செய்ய வேண்டும். பிரைவேட்டா என்ன வேணும்னாலும் பேசலாம்.
Rate this:
Cancel
27-செப்-202206:56:48 IST Report Abuse
அப்புசாமி வாஷிங்டன் போஸ்ட் டெமாக்ரடிக் கட்சியினரின் ஆதரவு பத்திரிகை. நம்ம ஆளு அங்கே போய் அப்கே பார் ட்ரம்ப் சர்க்கார்னு முழங்குனா அவிங்களுக்கு எரியாதா? போனோமா பொதுவா பேசுனோமான்னு இருக்காம... அதே மாதிரி, நமது ஏழைமக்ஜள் ட்ரம்ப் கண்ணில் படாம இருக்க சுவர் எழுப்பின செம்மல் ஆச்சே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X