சகமனிதராக மதிக்காமல் அவமதிப்பதுதான் திராவிட மாடலா?: சீமான் கேள்வி

Updated : செப் 27, 2022 | Added : செப் 26, 2022 | கருத்துகள் (32) | |
Advertisement
சென்னை: குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் அமைச்சர் ராமச்சந்திரனை சந்திக்க சென்றபோது அவமதித்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் சீமான், 'தொல்குடி மக்களை சகமனிதராக கூட மதிக்காமல் அவமதிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களது கோரிக்கைகளுடன் வருவாய்த்துறை
NTK, Seeman, KKSSR, நாம் தமிழர் கட்சி, சீமான், திராவிட மாடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் அமைச்சர் ராமச்சந்திரனை சந்திக்க சென்றபோது அவமதித்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் சீமான், 'தொல்குடி மக்களை சகமனிதராக கூட மதிக்காமல் அவமதிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களது கோரிக்கைகளுடன் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை சந்தித்துள்ளனர். அப்போது, அமைச்சர் சாதாரண உடையில் அமர்ந்தும், பிரதிநிதிகள் நின்றுக்கொண்டு பேசுவது போன்றும் புகைப்படம் வெளியானது. இதில் அமைச்சர் தீண்டாமையுடன் செயல்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிகழ்வுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.latest tamil newsஇது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குறவர் சமூக மக்களின் உரிமைகளுக்காக 6 நாட்களாக பட்டினி போராட்டம் நடத்திய வனவேங்கைகள் கட்சி தலைவர் இரணியன், தங்களது கோரிக்கைகள் குறித்தான மனுவை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் அளிக்க சென்றபோது அவமதிக்கப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சியுள்ளேன். இரணியன் உள்ளிட்டவர்களுக்கு அமர இருக்கைகூட அளிக்கப்படாததோடு, அவர்களை நிற்க வைத்தே பேசி அனுப்பி, பக்கத்தில் வராதே என கூறி அவமதித்தது பெரும் மனவலியை தருகின்றது.latest tamil news


இம்மண்ணின் தொல்குடி மக்களை சகமனிதராக கூட மதிக்காமல் அலட்சியப்படுத்துவதும், அவமதிப்பதும்தான் திராவிட மாடல் ஆட்சியா? இதுதான் ஈ.வெ.ரா.,வும், அண்ணாதுரையும் கற்றுத்தந்த சமத்துவ உணர்ச்சியா? மனு அளிக்க வந்தவர்களின் கோரிக்கைகளை ஏற்பது, புறந்தள்ளுவது என்பதை எல்லாம் கடந்து, வந்தவர்களுக்கு உரிய மானுட மதிப்பை அளித்திட வேண்டாமா?இந்த மனப்பான்மையைத்தான் திராவிட இயக்கம் கற்றுத் தந்ததா? வெட்கக்கேடு! அமைச்சர் ராமச்சந்திரனின் இத்தகைய அணுகுமுறைக்கு எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
30-செப்-202207:15:19 IST Report Abuse
Ravichandran Narayanaswamy திமுக தெலுங்கனுங்க தமிழ்நாட்டில் உள்ள "உண்மையான" தமிழர்களையும் தமிழ் கடவுளையும், தமிழ் புலவர்களையும் கேவலப்படுத்தி தமிழ்நாட்டை நாசம் செய்துவிட்டார்கள். இந்த சூழ்நிலையில் ...ங்க வெறிகொண்டு பெட்ரோல் குண்டுகளை வீசிக்கொண்டிருக்கும் வேளையில் முதல்வர் எதையும் கண்டுக் கொள்ளாமல் பூ பறித்துக்கொண்டிருக்கும் வேளையில் திரைப்படம் "பொன்னியின் செல்வன்" வெளியிடப்பட்டால் அது வெற்றி பெறாது. இந்த பன்னாடைகள் நாட்டை சீரழித்துவிட்டன. தினம் தினம் மக்கள் எப்படி தங்களை இந்த ரௌடிப்பசங்களிடமிருந்து காத்துக்கொள்ள வேண்டும் என்றே சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். இனி எந்த திரைப்படமும் சரியாக ஓடாது.
Rate this:
Cancel
Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
30-செப்-202207:14:30 IST Report Abuse
Ravichandran Narayanaswamy பட்டியிலினத்தவருக்கு இட ஒதுக்கீடு பெரியார் போட்ட பிச்சை என்கிறார் பொன்முடி.
Rate this:
Cancel
HONDA -  ( Posted via: Dinamalar Android App )
27-செப்-202208:43:50 IST Report Abuse
HONDA இவனெல்லாம் அமைச்சராக்கி பேரை கெடுத்துக்கிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X