இசையமைப்பாளர் அனிருத்தின் தாத்தா எஸ்.வி.ரமணன் மறைவு

Added : செப் 26, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: இசையமைப்பாளரும், இயக்குனருமான எஸ்.வி. ரமணன்(87) வயது மூப்பு காரணமாக காலமானார். இவர் பிரபல இசையமைப்பாளர் அனிருத்தின் தாத்தா ஆவார்.1930 - 40களில் தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கி புகழ்பெற்றவர் கே.சுப்ரமணியம். இவரது மகனான எஸ்.வி.ரமணன் சினிமாவில் பல துறைகளிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். ரேடியோ விளம்பரங்களில் பல புதுமைகளை புகுத்திய இவர் ஆயிரக்கணக்கான வானொலி
AnirudhRavichander, Grandfather, SVRamanan, Passed Away, அனிருத், இசையமைப்பாளர், தாத்தா, மறைவு

சென்னை: இசையமைப்பாளரும், இயக்குனருமான எஸ்.வி. ரமணன்(87) வயது மூப்பு காரணமாக காலமானார். இவர் பிரபல இசையமைப்பாளர் அனிருத்தின் தாத்தா ஆவார்.1930 - 40களில் தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கி புகழ்பெற்றவர் கே.சுப்ரமணியம். இவரது மகனான எஸ்.வி.ரமணன் சினிமாவில் பல துறைகளிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். ரேடியோ விளம்பரங்களில் பல புதுமைகளை புகுத்திய இவர் ஆயிரக்கணக்கான வானொலி விளம்பரங்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.ஆன்மிகம் சம்பந்தப்பட்ட ஆவண படங்களை தயாரித்த இவர், ரமண மகரிஷி, சீரடி சாய்பாபா ஆகிய ஆன்மிக ஞானிகள் பற்றி ஆவணப் படங்கள் இயக்கி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.இசை ஜாம்பவான்களான சலீல் சவுத்ரி (படங்கள் : செம்மீன், ஜல்தீப்), சிஎன்.பாண்டுரங்கன் (எதிர்பாராதது, பாண்டித் தேவன்) ஆகியோரிடம் உதவியாளராக இவர் பணியாற்றி உள்ளார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பிறகு ஒய்ஜி.மகேந்திரன், சுஹாசினி நடித்த உருவங்கள் மாறலாம் என்ற படத்தை இயக்கி, இசையமைக்கவும் செய்தார். இந்த படத்தில் வரும் ‛ஆண்டவனே உன்னை' என்ற பாடலை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனை மூலம் பாட வைத்து அழகு பார்த்தார்.சென்னை ஆர்.ஏ.புரத்தில் வசித்து வந்த எஸ்.வி. ரமணன் வயது மூப்பு காரணமாக இன்று (செப்.,26) காலமானார். ரமணனுக்கு பாமா என்ற மனைவியும் லட்சுமி, சரஸ்வதி என இரு மகள்களும் உள்ளனர். இவர்களின் லட்சுமியின் மகன் தான் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உள்ள அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது.ரமணனின் சகோதரிகளில் ஒருவரான டாக்டர் பத்மா சுப்ரமணியம் பிரபல பரதநாட்டிய கலைஞர். இவரது சகோதரரான டாக்டர் கிருஷ்ணசுவாமி குறும்பட இயக்குனர் ஆவார். மற்றொரு சகோதரரான அபஸ்வரம் ராம்ஜி இசைக்கலைஞர் மற்றும் பத்திரிக்கையாளர். குழந்தைகளை மையமாக வைத்து மேடை இன்னிசை இசை நிகழ்ச்சி நடத்தி மக்கள் மத்தியில் பிரபலமானவர். எஸ்.வி.ரமணன் இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெற்றது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
த.இராஜகுமார் - Tenkasi,இந்தியா
27-செப்-202208:07:32 IST Report Abuse
த.இராஜகுமார் ஆழ்ந்த இறங்கல்கள்
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
27-செப்-202202:45:56 IST Report Abuse
Aarkay May his soul rest in peace
Rate this:
Cancel
vns - Delhi,யூ.எஸ்.ஏ
26-செப்-202222:53:13 IST Report Abuse
vns தமிழகத்தின் திறமை ஆளுமை உள்ள ஜாம்பவான்கள் மறைவு மிகவும் துக்கத்தை தருகிறது. இவர்களுக்கு இடங்களை யாராலும் நிறப்ப முடிவதில்லை என்பது மிகவும் வருத்தத்தை தருகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X