வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பா.ஜ., தேசிய தலைவரான ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் 2024 லோக்சபா தேர்தல் வரை நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜ., தேசிய தலைவர் பதவி தேசிய அளவில் அனைத்து மட்டத்திலும் கட்சியை வலுப்படுத்தும் பொறுப்பு தலைவருக்கு உள்ளதால், அவர் முழு நேரம் கட்சிப் பணியாற்ற கூடியவராக இருப்பார்.
தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2014 - 19 வரையில் பா.ஜ., தேசிய தலைவராக பதவி வகித்தார்.
![]()
|
2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமித் ஷா, உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றவுடன் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, 2019 ஜூன் மாதம், ஜே.பி.நட்டா புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின், 2020 ஜனவரியில் நடந்த உட்கட்சி தேர்தலில், பா.ஜ., தேசிய தலைவராக நட்டா போட்டியின்றி தேர்வானார்.
நட்டாவின் மூன்றாண்டு பதவிக்காலம் 2023 ஜனவரியில் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், புதிய தலைவராக வேறு நபர் நியமிக்கப்படுவாரா அல்லது நட்டாவுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து பா.ஜ.வட்டாரங்கள் கூறுகையில், வரும் 2024 பாரளுமன்ற லோக்சபா தேர்தல் முடியும் வரை பா.ஜ., தேசிய தலைவராக நட்டா பதவிகாலம் நீட்டிக்கப்பட உள்ளது.
தவிர பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களை அவர் திறம்பட கையாண்டார். அவரது சொந்த மாநிலமான ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் வருகிற நவம்பரில் நடக்கிறது.
இதில், நட்டாவின் பணி கட்சியினரால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.