சாராய பாக்கெட்டுடன் சாலையில் சண்டை போட்ட சகோதரர்கள்

Added : செப் 26, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
பெரம்பலுார்:பெரம்பலுார் அருகே, சாராய பாக்கெட்டுடன் சகோதரர்கள் இருவர் ஒருவரையொருவர் தாக்கி சண்டையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.பெரம்பலுார் மாவட்டம், கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேஷ்,55, சுரேஷ்,50, இருவரும் சகோதரர்கள். இருவருக்குமிடையே சொத்து தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில், சகோதரி நிலத்தை விற்பனை செய்வதற்கு வெங்கடேஷ்
சாராய பாக்கெட்டுடன் சாலையில் சண்டை போட்ட சகோதரர்கள்

பெரம்பலுார்:பெரம்பலுார் அருகே, சாராய பாக்கெட்டுடன் சகோதரர்கள் இருவர் ஒருவரையொருவர் தாக்கி சண்டையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலுார் மாவட்டம், கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேஷ்,55, சுரேஷ்,50, இருவரும் சகோதரர்கள். இருவருக்குமிடையே சொத்து தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில், சகோதரி நிலத்தை விற்பனை செய்வதற்கு வெங்கடேஷ் அவருக்கு உதவி செய்ததாக கூறப்படுகிறது.


இதனால், ஆத்திரமடைந்த சுரேஷ் மாலை 4 மணியளவில் கிருஷ்ணாபுரம் பஸ் ஸ்டாப் அருகே டூவீலரில் வந்த வெங்கடேஷை எட்டி உதைத்து கீழே தள்ளினார்.இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ் தனது தம்பி சுரேஷை சாலையில் கீழே தள்ளி அடித்து உதைத்தார்.


ஏற்கனவே போதையில் இருந்த சுரேசும், கையில் 2 கள்ளச்சாராய பாக்கெட்டுகளுடன் அண்ணன் வெங்கடேஷை தாக்கினார்.இதை அங்கிருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். அப்போது, அங்கு வந்த வெங்கடேஷின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் இருவரையும் விலக்கி விட்டனர். இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் விலக்கிவிட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.


கையில் 2 கள்ளச்சாராய பாக்கெட்டுடன் சகோதரர்கள் இருவர் சாலையில் சண்டையிட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gilbert - vienna,ஆஸ்திரியா
27-செப்-202211:22:51 IST Report Abuse
gilbert சிரிப்பு போலீஸ் (உதவியாளரிடம்): 'அங்க ஒரு போர்டை மாட்டப்பா, "சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" னு. மைண்ட் வாய்ஸ்:இன்னிக்கு நம்ப வேல முடிஞ்சது.
Rate this:
Cancel
gilbert - vienna,ஆஸ்திரியா
27-செப்-202210:37:49 IST Report Abuse
gilbert சிரிப்பு போலீஸ்(உதவியாளரிடம்): அங்க ஒரு போர்டை மாட்டப்பா, "சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" னு. மைண்ட் வாய்ஸ்:அப்பா, என்கடமை முடிஞ்சது.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
27-செப்-202210:16:51 IST Report Abuse
jayvee கஞ்சா, புகையிலை, சாராயம், போதை பொருட்கள் .. தமிழகம் பிரகாசமான எதிர்காலம், தமிழகத்திற்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X