பெரம்பலுார்:பெரம்பலுார் அருகே, சாராய பாக்கெட்டுடன் சகோதரர்கள் இருவர் ஒருவரையொருவர் தாக்கி சண்டையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரம்பலுார் மாவட்டம், கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேஷ்,55, சுரேஷ்,50, இருவரும் சகோதரர்கள். இருவருக்குமிடையே சொத்து தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில், சகோதரி நிலத்தை விற்பனை செய்வதற்கு வெங்கடேஷ் அவருக்கு உதவி செய்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த சுரேஷ் மாலை 4 மணியளவில் கிருஷ்ணாபுரம் பஸ் ஸ்டாப் அருகே டூவீலரில் வந்த வெங்கடேஷை எட்டி உதைத்து கீழே தள்ளினார்.இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ் தனது தம்பி சுரேஷை சாலையில் கீழே தள்ளி அடித்து உதைத்தார்.
ஏற்கனவே போதையில் இருந்த சுரேசும், கையில் 2 கள்ளச்சாராய பாக்கெட்டுகளுடன் அண்ணன் வெங்கடேஷை தாக்கினார்.இதை அங்கிருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். அப்போது, அங்கு வந்த வெங்கடேஷின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் இருவரையும் விலக்கி விட்டனர். இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் விலக்கிவிட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
கையில் 2 கள்ளச்சாராய பாக்கெட்டுடன் சகோதரர்கள் இருவர் சாலையில் சண்டையிட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.