டாடா நெக்சான் இவி (TATA Nexon EV Max) மேக்ஸ் மாடல் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
இந்திய எலக்ட்ரிக் வாகனச்சந்தையில் கொடிகட்டி பறக்கும் டாடா நிறுவனம் இவி வாகனங்களை அணிவகுத்து அறிமுகம் செய்துவருகிறது. மேலும் பல்வேறு புது அறிமுக வாகனங்களையும் கைவசம் வைத்துள்ளது. ஏற்கனவே விற்பனையிலும் சரி, தரமான வாகன தயாரிப்பிலும் சரி முதலிடத்தில் இருக்கும் டாடா நிறுவனத்தின், நெக்சான் EV மேக்ஸ் மாடல் லடாக்கின் உம்லிங் எல்ஏ பாஸ் பகுதியை எட்டிய முதல் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை பெற்றதுமட்டுமல்லாமல் இந்திய சாதனை புத்தகத்திலும் இடம்பெற்று அசத்தியுள்ளது.
![]()
|
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் EV மேக்ஸ் நீண்ட ரேஞ்ச் வழங்கும் எலெக்ட்ரிக் சப்-காம்பேக்ட் எஸ்யுவி என்று அனைவருக்கும் தெரிந்த விஷயமே.. இருப்பினும் இதனை உறுதி செய்யும் விதமாக உலகின் உயரமான பகுதியான லடாக்கில் உள்ள உம்லிங் எல்ஏ பாஸ் வரை சென்று சாதனை படைத்துள்ளது.
![]()
|
உம்லிங் எல்ஏ பாஸ் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து 19 ஆயிரத்து 24 அடி உயரத்தில் உள்ளது. இது சாலை மார்க்கமாக பயணம் செய்யக்கூடிய உலகின் உயரமான பகுதி. அனுபவம் மிக்க ஓட்டுனர்கள் குழு மூலம் லே பகுதியில் இருந்து பயணத்தை துவங்கி வெற்றிகரமாக செப்டம்பர் 18 ம் தேதி உம்லிங் எல்ஏ பாஸ் வரை சென்று இந்த சாதனையை நிறைவு செய்தது.
![]()
|
அதிக ரேஞ்ச் வழங்குவதற்காக டாடா நெக்சான் இவி மேக்ஸ் மாடலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிப்டிரான் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 40.5 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு உள்ளது. இது நெக்சான் இவி மாடலில் உள்ளதை விட 33 சதவீதம் பெரிய பேட்டரி ஆகும்.
அதுமட்டுமல்லாமல், இந்த சாதனைக்கு நெக்ஸான் இவி மேக்ஸ் மாடலின் செயல் திறனே காரணம். அதாவது, டாடா நெக்சான் இவி மேக்ஸ் மாடல் முழு சார்ஜ் செய்தால் 437 கிலோமீட்டர் வரை செல்லும் என ARAI தர சான்று பெற்று இருக்கிறது. இதுதவிர, இதில் உள்ள பேட்டரி மற்றும் மோட்டார் IP67 தர சான்று பெற்றுள்ளன. இத்துடன் எட்டு ஆண்டுகள் அல்லது 1 லட்சத்து 60 ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு வாரண்டி வழங்கப்பட்டு இருக்கிறது.
![]()
|
மேலும், டாடா நெக்ஸான் இவி-யில் காந்த சக்தி கொண்ட ஏசி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளதால், இந்த என்ஜின் 141 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. அதுபோக மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 9 நொடிகளுக்குள் எட்டிவிடும் திறன் கொண்டதாம். அதிகபட்சமாக மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் மட்டும் செல்லும் வகையில் இந்த டாடா நெக்ஸான் இவி உருவாக்கப்பட்டுள்ளது.