சென்னை :தமிழக கவர்னர் ரவி, திடீர் பயணமாக டில்லி சென்று உள்ளார்.தமிழகம் உட்பட 15 மாநிலங்களில், 93 இடங்களில், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், தேசிய புலனாய்வு பிரிவான என்.ஐ.ஏ., மற்றும் அமலாக்கத் துறை
அதிகாரிகள் சோதனை நடத்தினர்; பலரை கைது செய்தனர்.
இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பா.ஜ., நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடந்தது.சில இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சும் நடந்துள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து, சிலரை கைது செய்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், கவர்னர் ரவி மாலை 5:12 மணி விமானத்தில் டில்லி சென்றார். அங்கு, உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பலரை சந்திக்க உள்ளார்.
தமிழகத்தில் நடந்த தாக்குதல் உட்பட பலவிஷயங்கள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சரிடம், கவர்னர் அறிக்கை அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. வரும் 30ம்
தேதி கவர்னர் சென்னை திரும்புகிறார்.
Advertisement