சிறுமியை விபச்சாரத்தில் தள்ளிய வழக்கில் 13 பேருக்கு... 20 ஆண்டு சிறை!

Updated : செப் 28, 2022 | Added : செப் 26, 2022 | கருத்துகள் (33) | |
Advertisement
சென்னை:சென்னையில், 13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, நாசம் செய்த வழக்கில், போலீஸ் இன்ஸ்பெக்டர், பா.ஜ., பிரமுகர், உணவு வழங்கல் துறை அதிகாரி உட்பட, 13 பேருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுமியின் உறவினர்கள் எட்டு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை 'போக்சோ' சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.சென்னை வண்ணாரப்பேட்டையைச்
சிறுமியை விபச்சாரம், தள்ளிய வழக்கு 13 பேருக்கு... 20 ஆண்டு சிறை!

சென்னை:சென்னையில், 13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, நாசம் செய்த வழக்கில், போலீஸ் இன்ஸ்பெக்டர், பா.ஜ., பிரமுகர், உணவு வழங்கல் துறை அதிகாரி உட்பட, 13 பேருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுமியின் உறவினர்கள் எட்டு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை 'போக்சோ' சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், 2020ல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், தன் 13 வயது மகளை, தன் அக்கா மகளும், அவரது கணவரும் சேர்ந்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, வன்கொடுமை செய்துள்ளதாக கூறியிருந்தார்.


26 பேர் மீது வழக்குஇச்சம்பவம் குறித்து, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.சிறுமியின் உறவினர்கள், எண்ணுார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புகழேந்தி, 45, பா.ஜ., வடசென்னை மாவட்ட பிரமுகர் ராஜேந்திரன், 44, உணவு வழங்கல் துறை அதிகாரி கண்ணன், 53, உட்பட 26 பேர் மீது, பாலியல் வன்முறை தொடர்பான, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.


22 பேர் கைதுஇதையடுத்து, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கில் தொடர்புடைய26 பேரில், 22 பேரை போலீசார் கைது செய்தனர்; நான்கு பேர் தலைமறைவாகினர்.மீதமுள்ள 22 பேர் மீதான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, எம்.ராஜலட்சுமி முன் நடந்து வந்தது. வழக்கில், அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.ஜி.கவிதா ஆஜரானார்.மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கில், 22 பேர் மீது, 600 பக்கங்கள் உடைய குற்றப்பத்திரிகையை, 2021 பிப்., 5ல் விசாரணை அதிகாரியான போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி தாக்கல் செய்தார்.இந்த வழக்கில், 96 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணையின் போது, ஆக., 7ல் குற்றவாளி மாரீஸ்வரன் என்பவர் இறந்து விட்டார். அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதையடுத்து, ஏழு பெண்கள் உட்பட 21 பேரும் குற்றவாளிகள் என்றும், தண்டனை விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், 15ல் நீதிபதி தீர்ப்பளித்தார். குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
வன்கொடுமைஅதன்படி இந்த வழக்கு, நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் பட்டியலிடப்பட்டது. குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 21 பேரும், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பகல் 12:00 மணிக்கு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின், 12:30 மணிக்கு தண்டனை விபரங்களை நீதிபதி அறிவித்தார்.
அதன் விபரம்:சிறுமி என்றும் பாராமல், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வன்கொடுமை செய்துள்ளனர்; இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால், குற்றவாளிகளுக்கு கருணை காட்டக் கூடாது.எனவே, ஆறு பெண்கள்உட்பட சிறுமியின் உறவினர்கள் எட்டு பேருக்கு, இரட்டை ஆயுள் தண்டனை, தலா 17 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இன்ஸ்பெக்டர் புகழேந்தி, பா.ஜ., பிரமுகர் ராஜேந்திரன், உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரி கண்ணன், 53, காமேஸ்வரராவ், 33, முகமது அசாருதீன், 33,
பசுலுதீன், 32, தனியார் 'டிவி' நிருபர் வினோபாஜி, 39.

கிரிதரன், 36, ராஜாசுந்தரம், 62, நாகராஜ், 30, பொன்ராஜ், 35, வெங்கட்ராம் என்ற அஜய், 25, அனிதா என்ற கஸ்துாரி, 36 ஆகிய, 13 பேருக்கு, தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.இன்ஸ்பெக்டர் புகழேந்திக்கு, 1.25 லட்சம் ரூபாயும், உணவு வழங்கல் துறை அதிகாரி கண்ணன், ராஜாசுந்தரம் ஆகியோருக்கு, தலா 1 லட்சம் ரூபாயும், பா.ஜ., பிரமுகர் ராஜேந்திரன், வினோபாஜி, கிரிதரன், காமேஸ்வரராவ் ஆகியோருக்கு, தலா 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது. மொத்தம், 7 லட்சத்து 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த தண்டனையை, அனைத்து குற்றவாளிகளும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு, தமிழக அரசு இழப்பீடாக, 5 லட்சம் ரூபாயும், அபராத தொகையும் வழங்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.இதில் இன்ஸ்பெக்டர் புகழேந்திக்கு மட்டும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், 20 ஆண்டு; சிறுமி என தெரிந்தும், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றத்துக்காக, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
'பணம் சம்பாதிக்கும் நோக்கில் பாலியல் தொழிலில் ஈடுபடும் கும்பலிடம், பெரும்பாலும் சிறுமியர் இரையாகின்றனர்; அவர்களிடம் சிறுமியர் இரையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என, தீர்ப்பில் நீதிபதி கூறி உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
30-செப்-202208:39:09 IST Report Abuse
Ravichandran Narayanaswamy தண்டனைகள் கடுமையாக்கப்படாவிட்டால் குற்றங்கள் குறையாது. நீதிமன்றங்கள் அதைப்பற்றி பேசுவதே இல்லை. குற்றங்கள் இருந்தால் தான் அவர்களுக்கு வியாபாரம் என்று நினைக்கிறார்களோ?
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
29-செப்-202203:04:39 IST Report Abuse
NicoleThomson வெளியே பயிரை மேய்ந்தது போன்று என்ற சொலவடை இவர்களுக்கு சால பொருந்தும் , சிலர் மரண தண்டனை என்கிறார்கள் , சிலர் சிறை தண்டனை என்கிறார்கள் , ஒரு பெண்ணான என்னுள்ளும் இப்படி ஒரு தண்டனை சிந்தனை , இவர்களை அடைத்த சிறைக்கு அந்த சிறுமியை வார்டன் ஆகா போடவேண்டும் , அதன்மூலம் அந்த சிறுமிக்கும் ஒரு பாதுகாப்பு நிறைந்த வாழ்க்கை , இவர்கள வெச்சு செய்த மாதிரியும் இருக்கும் , கவனிப்பார்களா?
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
27-செப்-202221:27:02 IST Report Abuse
sankar அண்ணாமலை , இந்த உத்தம வட சென்னை மாவட்ட பிரமுகர்(?) பத்தி மீட்டிங்க்ல் பெருமையா பேசுங்களேன்.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
28-செப்-202213:58:57 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்தகவலை சொல்லும் அம்பை திட்டாதீர்கள். கண்டுகொள்ளாதிருக்கும் இந்த இந்திய சமூக, அரசு அவலத்தை சாடுங்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X