கட்சிகளுக்கான சின்னம் எதிர்க்கும் வழக்கு தள்ளுபடி

Updated : செப் 26, 2022 | Added : செப் 26, 2022 | |
Advertisement
புதுடில்லி:அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கு தொடர்வதை, 'பொழுதுபோக்காக' எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறிய அமர்வு, 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், தேர்தல் சின்னம் தொடர்பாக தொடர்ந்த வழக்கை அலகாபாத் உயர்
 கட்சிகளுக்கான சின்னம் எதிர்க்கும் வழக்கு தள்ளுபடி


புதுடில்லி:அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கு தொடர்வதை, 'பொழுதுபோக்காக'
எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறிய அமர்வு, 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், தேர்தல் சின்னம் தொடர்பாக தொடர்ந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஏ.எஸ்.ஓகா அடங்கிய அமர்வு தீர்ப்பில் கூறியுள்ளதாவது:


latest tamil news



தேர்தலுக்காகவே சின்னங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதனால் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் சின்னத்தை ஒதுக்க அதிகாரம் இல்லை; தேர்தல் நடத்தும் அதிகாரி தான் ஒதுக்க முடியும் என்று மனுதாரர் கூறியுள்ளார்.
அவருடைய இந்த வாதத்தை ஏற்க முடியாது. தேர்தல் நடைமுறைகளில் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு நிரந்தர தேர்தல் சின்னம் வழங்கப்படுகிறது.
அதே நேரத்தில் தேர்தலில் போட்டியிடும் மற்றவர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படுகிறது. இதற்கான வித்தியாசத்தை மனுதாரர் புரிந்து கொள்ளவில்லை. வழக்குகள் தொடர்வதை ஒரு பொழுதுபோக்காக எடுத்து கொள்ளக் கூடாது. இந்த மனு தள்ளுபடி
செய்யப்படுகிறது. நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக, மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X