நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு இடைக்கால ஜாமின்

Added : செப் 27, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி :பணப்பரிமாற்ற மோசடி வழக்கில், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு, புதுடில்லி நீதிமன்றம் இடைக்கால 'ஜாமின்' வழங்கி நேற்று உத்தரவிட்டது.தமிழகத்தைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், புதுடில்லி தொழிலதிபர்களின் குடும்பத்தினரை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார்.மோசடி செய்த பணத்தில், பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின்
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், இடைக்கால ஜாமின்

புதுடில்லி :பணப்பரிமாற்ற மோசடி வழக்கில், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு, புதுடில்லி நீதிமன்றம் இடைக்கால 'ஜாமின்' வழங்கி நேற்று உத்தரவிட்டது.தமிழகத்தைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், புதுடில்லி தொழிலதிபர்களின் குடும்பத்தினரை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார்.



மோசடி செய்த பணத்தில், பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா பதேகி ஆகியோருக்கு சொகுசு கார்கள் உட்பட பல விலை உயர்ந்த பொருட்களை இவர் வாங்கிக் கொடுத்ததாக, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக, அமலாக்கத்துறை மற்றும் புதுடில்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நடிகை ஜாக்குலினிடம் பலமுறை விசாரணை நடத்தினர். அமலாக்கத்துறையினர் சமீபத்தில் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில், ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றவாளியாக சேர்த்தனர்.இந்நிலையில் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.


latest tamil news



அவரை செப்., 26ல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு புதுடில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.அப்போது, வக்கீல் போல வெள்ளை சட்டை, கறுப்பு பேன்ட் அணிந்து ஜாக்குலின் நீதிமன்றத்துக்கு வந்தார். நீதிபதி முன் ஆஜரான அவர், இடைக்கால ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு விசாரணை அடுத்த மாதம் 22க்கு ஒத்திவைக்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-செப்-202206:45:57 IST Report Abuse
Gopalakrishnan S ஒரு வருஷ நட்பிற்கு ஐந்து கோடி ரூபாய் .... நல்ல தொழில் .
Rate this:
Cancel
Fastrack - Redmond,இந்தியா
27-செப்-202206:24:19 IST Report Abuse
Fastrack தினகரன் சின்னத்துக்கு சுரேஷிடம் பணம் கொடுத்தார் ..அதையும் உண்டியலில் போட்டு தொலைத்தாரான்னு தெரியல ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X