45 'வீடியோ'க்களை நீக்கமத்திய அரசு உத்தரவு

Added : செப் 27, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி மத வெறுப்புணர்வை துாண்டும் விதமாக வெளியிடப்பட்டுள்ள 45 'வீடியோ'க்களை நீக்க சமூக வலைதளமான 'யுடியூப்' சேனலுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் கூறியதாவது:மத வெறுப்புணர்வை துாண்டும் விதமாக, போலி செய்திகளை 'மார்பிங்' செய்யப்பட்ட படங்களுடன் இணைத்து, யுடியூப்பின் 10 சேனல்களில் 45
45 'வீடியோ'க்கள், மத்திய அரசு உத்தரவு

புதுடில்லி மத வெறுப்புணர்வை துாண்டும் விதமாக வெளியிடப்பட்டுள்ள 45 'வீடியோ'க்களை நீக்க சமூக வலைதளமான 'யுடியூப்' சேனலுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.



இதுகுறித்து, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் கூறியதாவது:மத வெறுப்புணர்வை துாண்டும் விதமாக, போலி செய்திகளை 'மார்பிங்' செய்யப்பட்ட படங்களுடன் இணைத்து, யுடியூப்பின் 10 சேனல்களில் 45 வீடியோக்கள் வெளியிட்டிருப்பது கண்டறியப்பட்டன. அவற்றை உடனே நீக்க யுடியூப் நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



latest tamil news


இந்த 10 சேனல்களுக்கும் 1.30 கோடி பார்வையாளர்கள் உள்ளனர். மத்திய அரசின் அக்னிபத் திட்டம், நம் ராணுவம், தேசிய பாதுகாப்பு அமைப்பு மற்றும் காஷ்மீர் விவகாரம் ஆகியவை குறித்து, இந்த வீடியோக்களில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. சமூக வலைதளங்கள் மத்திய அரசால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vadivelu - thenkaasi,இந்தியா
27-செப்-202207:05:21 IST Report Abuse
vadivelu கண்டிப்பாக செய்ய வேண்டும். சில கிறுக்கு பயல்கள் தங்களை வளர்த்து கொள்ள நம் நாட்டை கொச்சை படுத்து கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X