இது உங்கள் இடம்: மீண்டும் வனவாசம் போவீர்கள்

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (60) | |
Advertisement
க.ஸ்ரீதர், கல்லிடைக்குறிச்சி, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தர்மபுரி லோக்சபா தொகுதி தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார், பூமி பூஜைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த, செங்கற்களை எட்டி உதைத்ததோடு, மாவட்ட ஆட்சியர் மற்றும் தி.மு.க.,வினரை ஒருமையில் பேசி, 'பூமி பூஜை நிகழ்ச்சிகளில், மதம் சார்ந்த வைபவங்கள் எனக்கு பிடிக்காது' என்று கூறி, பின்,
தர்மபுரி லோக்சபா தொகுதி,  தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார், பூமி பூஜை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


க.ஸ்ரீதர், கல்லிடைக்குறிச்சி, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தர்மபுரி லோக்சபா தொகுதி தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார், பூமி பூஜைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த, செங்கற்களை எட்டி உதைத்ததோடு, மாவட்ட ஆட்சியர் மற்றும் தி.மு.க.,வினரை ஒருமையில் பேசி, 'பூமி பூஜை நிகழ்ச்சிகளில், மதம் சார்ந்த வைபவங்கள் எனக்கு பிடிக்காது' என்று கூறி, பின், செங்கற்களை ஒழுங்குபடுத்தி விட்டு சென்றுள்ளார்.

தி.மு.க., நிர்வாகிகளே, வெளிப்படையாக இந்த செய்தியை பத்திரிகைகளுக்கு தெரிவித்துள்ளனர். தன் தவறுக்காக, எம்.பி., செந்தில்குமார், சிறிதும் வருத்தம் அடையவில்லை; அவரை எம்.பி.,யாகத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்கள் தான் வெட்கப்பட வேண்டியுள்ளது. அடுத்ததாக, திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியரை, தி.மு.க., பெண் கவுன்சிலர் ரமணியின் கணவர் துரைசாமி தரக்குறைவாக பேசியதுடன், அவரின் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார்;


latest tamil newsஇந்த சம்பவம் குறித்த வீடியோ பரவி வருகிறது. தஞ்சையில் நடந்த, தி.மு.க., பொதுக்கூட்டத்தில், தி.மு.க., பேச்சாளர் ஒருவர், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை, மிகவும் தரக்குறைவாக விமர்சித்து கூலிக்கு மாறடித்துள்ளார். அவரின் பேச்சை கேட்க முடியாமல், பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த தி.மு.க., மகளிர் அணியினரே, தலையில் அடித்துக் கொண்டு வெளியேறியுள்ளனர்.

அதேபோல, தி.மு.க., - எம்.பி., - ஆ.ராஜா, 'ஹிந்துக்கள் எல்லாம் விபச்சாரி களின் மகன்கள்' என்று பேசி புளகாங்கிதம் அடைந்துள்ளார்.
தாம்பரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜா, தனியார் நிறுவன ஊழியர்களை தரக்குறைவாக பேசியதால், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி லோக்சபா தொகுதி தி.மு.க., -எம்.பி.,யின் மகன் கல் குவாரி விவகாரத்தில் சிக்கி உள்ளார்.

தி.மு.க., அரசு பதவியேற்ற ஒன்றரை ஆண்டுகளில், இப்படி தி.மு.க., - எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், கவுன்சிலர்களின், அராஜகங்கள், அட்டூழியங்கள், மிரட்டல்கள், மதவெறியை துாண்டி உரசிப் பார்க்கும் நிகழ்வுகள் அதிகரிக்கத் துவங்கி உள்ளன.

தி.மு.க.,வை, 10 ஆண்டுகளாக வனவாசம் அனுப்பிய தமிழக மக்கள், இம்முறையாவது திருந்துவர் என நினைத்து, ஆட்சி அதிகாரத்தை வழங்கினர். ஆனால், ஒன்றரை ஆண்டுகளிலேயே, திராவிட செம்மல்களின் அட்டகாசம் சொல்ல முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அதனால்,மக்கள் பொறுமை இழந்து வருகின்றனர். அந்த பொறுமை எல்லை மீறினால், மீண்டும், 10 ஆண்டுகள் அல்ல... மேலும், பல ஆண்டுகளுக்கு வனவாசம் செல்ல வைத்து விடுவர் என்பதை, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் நினைவில் கொள்ள வேண்டும்.
முதல்வர் அவர்களே... கட்சியினரை அடக்கி வையுங்க; இல்லையெனில், மக்களே அடக்கி விடுவர்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
27-செப்-202221:39:30 IST Report Abuse
sankar ஜீப் ஏத்தி விவசாயிங்களை பிஜேபீ மந்திரி மகன் கொலை பண்ணானே,அந்தப் படத்தைப் போடலியே. ஏன்?
Rate this:
Aanmeega Kaavi Sangar Nadar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
28-செப்-202213:04:04 IST Report Abuse
Aanmeega Kaavi Sangar Nadarஅது ப்ரியங்க வாதர வின் வழிநடத்தலின் பேரில் காங்கிரஸ் காரர்கள் செய்த செயல். இந்த உண்மை மக்களுக்கு தெரிந்ததால் தான் காங்கிரஸ் உத்தரபிரதேசத்தில் படு தோல்வி அடைந்து மண்ணை கவ்வியது...
Rate this:
Cancel
Sathya -  ( Posted via: Dinamalar Android App )
27-செப்-202220:07:37 IST Report Abuse
Sathya Shameless MP of Dharmapuri and Shameless people who elected this foolish MP.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
27-செப்-202217:40:22 IST Report Abuse
DVRR பன்றி மலம் தின்னும் திமுக அசிங்கமான ஆபாசமான வார்த்தைகளை பேசும் - இது புது திராவிட மாடல் பழமொழி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X