வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கூடலுார் : ''யார் பெட்ரோல் குண்டு வீசினாலும் தவறு தான்,'' என, காங்., மாநில தலைவர் அழகிரி கூறினார்.காங்., எம்.பி., ராகுல் வரும், 29ல் நீலகிரி மாவட்டம், கூடலுாரில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
இதற்கான ஆலோசனை கூட்டம், கூடலுார் ஜானகி அம்மாள் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.கூட்டத்தில் பங்கேற்ற, கட்சியின் மாநில தலைவர் அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:கட்சியை வளர்க்க வேண்டும், பிரதமராக வேண்டும் என்ற நோக்கம் மட்டுமின்றி, நாட்டு மக்களை ஒன்றுபடுத்தி ஆர்.எஸ்.எஸ்.,சின் தவறான சித்தாந்தத்தை உடைத்தெறிய வேண்டும் என்பதற்காக ராகுல் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
![]()
|
இதை திசை திருப்ப, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் சில அமைப்புகளின் அலுவலம், நிர்வாகிகள் வீடுகளில் மத்திய அரசு சோதனை நடத்தியுள்ளது. மத்திய அரசு தங்களுக்கு பிடிக்காதவர்களின் பெயரை கெடுக்க, இதுபோன்ற சோதனை செய்வதை கண்டிக்கின்றோம். தமிழகத்தின் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீசியதாக தகவல் உள்ளது.
அதை யார் வீசினாலும் தவறுதான்.இவ்வாறு, அவர் கூறினார்.ஊட்டி எம்.எல்.ஏ., கணேசன், சட்டசபை காங்., குழு தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.பி.,க்கள் ஜெயக்குமார், ஜோதிமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.