பொன்முடி ஏளன பேச்சு; அண்ணாமலை கண்டனம்

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
சென்னை : 'வாக்குறுதிகளை காப்பாற்ற வக்கில்லாத தி.மு.க., அரசு, ஓட்டளித்த மக்களை துச்சமாக மதித்து, ஏளனம் பேசுவது கண்டிக்கத்தக்கது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துஉள்ளார்.உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி, ஒரு கூட்டத்தில் மக்களை பார்த்து, 'உங்களுக்கு ரேஷன் கார்டுக்கு 4,000 ரூபாய் கொடுத்தாரு; வாங்குனீங்களா இல்லையா... வாய திறங்க; இப்போ பஸ்ல எப்படி போறீங்க, எல்லாரும்
Ponmudi, Annamalai, DMK, பொன்முடி, அண்ணாமலை, திமுக, பாஜ,  BJP,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



சென்னை : 'வாக்குறுதிகளை காப்பாற்ற வக்கில்லாத தி.மு.க., அரசு, ஓட்டளித்த மக்களை துச்சமாக மதித்து, ஏளனம் பேசுவது கண்டிக்கத்தக்கது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துஉள்ளார்.உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி, ஒரு கூட்டத்தில் மக்களை பார்த்து, 'உங்களுக்கு ரேஷன் கார்டுக்கு 4,000 ரூபாய் கொடுத்தாரு; வாங்குனீங்களா இல்லையா... வாய திறங்க; இப்போ பஸ்ல எப்படி போறீங்க, எல்லாரும் 'ஓசி' பஸ்ல போறீங்க' என்று பேசிய 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையாகி வருகிறது.


latest tamil news



மக்களை ஏளனமாக பேசியதை கண்டித்து, பொன்முடிக்கு எதிராக பலரும் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக, அண்ணாமலை அறிக்கை:மக்களுக்கான சலுகைகளை, தி.மு.க., அரசு மக்களின் வரி பணத்தில் இருந்து தான் தருகிறது; பெருத்து வழியும் கோபாலபுரத்து கஜானாவில் இருந்து அல்ல.கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற வக்கில்லாத தி.மு.க., அரசு, நம்பி ஓட்டளித்த பாமர மக்களை துச்சமாக மதித்து, ஏளனம் பேசுவது கண்டிக்கத்தக்கது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
27-செப்-202210:56:55 IST Report Abuse
செல்வம் என்னவோ இவன் அப்பா வீட்டு காசுல குடுக்குற மாதிரி பேசுறானுங்க
Rate this:
Cancel
neo - Nagercoil,இந்தியா
27-செப்-202210:30:55 IST Report Abuse
neo கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாத உங்க தலைவர் வாய்ச்சொல் வீரர் மோடியிடமும் இந்த கேள்வியை நீங்க கேட்கலாமே.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
27-செப்-202210:28:27 IST Report Abuse
jayvee இவருக்கும் ஒரு மகன் உள்ளார்.. இவர் பதவியில் இல்லையென்றால் அடுத்தது தெருமுனைதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X