வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : 'வாக்குறுதிகளை காப்பாற்ற வக்கில்லாத தி.மு.க., அரசு, ஓட்டளித்த மக்களை துச்சமாக மதித்து, ஏளனம் பேசுவது கண்டிக்கத்தக்கது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துஉள்ளார்.உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி, ஒரு கூட்டத்தில் மக்களை பார்த்து, 'உங்களுக்கு ரேஷன் கார்டுக்கு 4,000 ரூபாய் கொடுத்தாரு; வாங்குனீங்களா இல்லையா... வாய திறங்க; இப்போ பஸ்ல எப்படி போறீங்க, எல்லாரும் 'ஓசி' பஸ்ல போறீங்க' என்று பேசிய 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையாகி வருகிறது.
![]()
|
மக்களை ஏளனமாக பேசியதை கண்டித்து, பொன்முடிக்கு எதிராக பலரும் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக, அண்ணாமலை அறிக்கை:மக்களுக்கான சலுகைகளை, தி.மு.க., அரசு மக்களின் வரி பணத்தில் இருந்து தான் தருகிறது; பெருத்து வழியும் கோபாலபுரத்து கஜானாவில் இருந்து அல்ல.கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற வக்கில்லாத தி.மு.க., அரசு, நம்பி ஓட்டளித்த பாமர மக்களை துச்சமாக மதித்து, ஏளனம் பேசுவது கண்டிக்கத்தக்கது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.