கொப்பால்-கொப்பால் கங்காவதியில், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த பழ வியாபாரி கைது செய்யப்பட்டார்.ஷிவமொகாவில் நடந்த ஒரு கொலை சம்பவம் தொடர்பாக போலீஸ் நடத்திய விசாரணையில், கொப்பால் கங்காவதியில் உள்ள ஷப்பிர் மண்டலகிரி என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரது பின்னணி குறித்து நடத்திய விசாரணையில், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக கண்டறியப்பட்டது.இதையடுத்து, ஷிவமொகா போலீசார் நேற்று முன்தினம் கங்காவதி சென்றனர். தள்ளுவண்டியில் பழங்கள் வியாபாரம் செய்யும் அவரை, நேற்று காலை வீட்டில் கைது செய்தனர். கூடுதல் தகவலுக்காக ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்படுகிறார்.