அழுவதா, சிரிப்பதா? துரைமுருகன் கிண்டல்!

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
சென்னை : 'அ.தி.மு.க., வில் ஏற்பட்ட பிளவு காரணமாக, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி மெத்தவும் தடுமாறி போயிருக்கிறார்' என, நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, அவரது கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக, தடுமாறி போயிருக்கிறார்; நிதானம் தவறி இருக்கிறார் என்பது, அவரது அறிக்கை வழியே தெரிகிறது.'ஸ்டாலின் அரசு கையாலாகாத
அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர், பழனிசாமி,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphoneசென்னை : 'அ.தி.மு.க., வில் ஏற்பட்ட பிளவு காரணமாக, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி மெத்தவும் தடுமாறி போயிருக்கிறார்' என, நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, அவரது கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக, தடுமாறி போயிருக்கிறார்; நிதானம் தவறி இருக்கிறார் என்பது, அவரது அறிக்கை வழியே தெரிகிறது.'ஸ்டாலின் அரசு கையாலாகாத அரசு, விடியா அரசு, கும்பகர்ணன் துாக்கம் கொண்ட அரசு' என, வார்த்தைகளை அறிக்கையில் கொட்டி இருக்கிறார்.


latest tamil newsஆந்திர அரசு, பாலாற்றின் குறுக்கே, ஒரு நீர்த்தேக்கம் கட்டப் போவதாக, ஒரு பொதுக்கூட்ட செய்தி வந்துள்ளது.அதை முன்னிருத்தி, தமிழக அரசு என்ன சாதித்து விட்டது என்று அவசர குடுக்கையாக பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதை பார்த்து எனக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை, அரசு தீவிரமாக கண்காணிக்கிறது;தேவையான நடவடிக்கைகளை, தக்க நேரத்தில் எடுக்கும்.இந்த நிர்வாக ரீதியான செயல்பாடு எல்லாம் பழனிசாமிக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. அவர் எந்த அணையையும் கட்டவில்லை. அந்தரத்தில் நீர்ப்பாய்ச்சும் அரசு நடத்தியவருக்கு, நிர்வாக முறைகள் எப்படி தெரியும்? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tc Raman - Kanchipuram,இந்தியா
27-செப்-202212:33:30 IST Report Abuse
Tc Raman தி மு க ஆட்சியில் தான் காவேரி ஒப்பந்தம் புதிப்பிக்கப்படாமல் காலாவதி ஆனது. பல அணைகள் கர்நாடகத்தில் கட்டப்பட்டன. தி மு க ஆட்சியில் தான் கட்ச தீவு தாரை வார்க்கப்பட்டது. தி மு க ஆட்சியில் தான் முல்லை பெரியாரணை பிரச்னை விஸ்வரூபம் எடுக்கிறது. இப்படி ஏகடியம் பாஷை தமிழகத்துக்கு துரோகம் செய்வதையே தொழிலாக கொண்டுள்ளது தி மு க .
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
27-செப்-202212:02:17 IST Report Abuse
Krishnamurthy Venkatesan வாய் ஜாலம்.
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
27-செப்-202210:49:19 IST Report Abuse
Narayanan துரைமுருகன் ஒரு நீண்ட நெடிய அரசியல்வாதி . நவீன துரியோதனன். நிர்வாகம் பற்றி வகுப்பு எடுக்கிறார் . பழனிசாமி தனது சுயநலத்தினால் கட்சியின் மாண்பை கெடுத்துவிட்டார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X