சோழவரம்--சோழவரம் போலீசார் ஆற்றுப்பகுதியில் நேற்று முன்தினம், கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு, ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக, லாரிகளில் சவுடு மண் அள்ளப்பட்டு கொண்டிருப்பதை கண்டனர்.விசாரணையில், அவற்றை வெளி சந்தையில் விற்பனை செய்து வந்தது தெரிந்தது.அதை தொடர்ந்து, சவுடு மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட, நான்கு டிப்பர் லாரிகள், ஒரு ஜே.சி.பி., இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக, சோழவரம் போலீசார் வழக்கு பதிந்து, காரனோடை பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் உமாபதி, 38, உமாமகேஷ், 39, ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், மூன்று பேரை தேடி வருகின்றனர்.