திருவாலங்காடு--திருவாலங்காடு ஒன்றியம், வியாசபுரம் ஊராட்சியில் இருந்து, அரக்கோணம் செல்லும் சாலையில், நான்கு மின் கம்பங்கள் சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்து, கம்பிகள் வெளியில் தெரியும் நிலையில் உள்ளது.எனவே இந்த சேதமடைந்த மின் கம்பத்திற்கு மாற்றாக புதிய மின் கம்பங்கள் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து, 20 நாட்களுக்கு முன், புதிய மின் கம்பங்கள் வரவழைக்கப்பட்டது. ஆனால், இதுவரை மாற்றப்படவில்லை.புதிதாக வரவழைக்கப்பட்ட மின் கம்பம், பழைய கம்பம் அருகே கேட்பாரற்று போடப்பட்டுள்ளது.இந்நிலையில், சேதமடைந்த மின் கம்பம் பலத்த காற்று, மழை பெய்தால் உடைந்து விழும் நிலையில் உள்ளது.மேலும், இந்த சேதமடைந்த மின் கம்பம் சாலை ஓரத்தில் உள்ளதால், மின் விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, மின் கம்பத்தை மாற்ற திருவாலங்காடு மின் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.