'சமூக விரோதிகளின் தைரியத்திற்கு தி.மு.க., அரசு தான் காரணம்'

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (46) | |
Advertisement
கோவை : ''பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில், என்.ஐ,ஏ.,வுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளித்தால் இன்னும் பல விஷயங்கள் வெளிவரும்,'' என, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட கோவைப்புதுார், குனியமுத்துார் பரத் நகர், ஒப்பணக்கார வீதி, காந்திபுரம், 100 அடி ரோடு உள்ளிட்ட ஆறு இடங்களை, வானதி சீனிவாசன் நேற்று பார்வையிட்டார்.
Petrol Bomb, Vanathi Srinivasan, NIA,சமூக விரோதிகள், திமுக, கோவை, பெட்ரோல் குண்டு, வானதி சீனிவாசன், என்ஐஏ, Anti socials, DMK, Coimbatore,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


கோவை : ''பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில், என்.ஐ,ஏ.,வுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளித்தால் இன்னும் பல விஷயங்கள் வெளிவரும்,'' என, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட கோவைப்புதுார், குனியமுத்துார் பரத் நகர், ஒப்பணக்கார வீதி, காந்திபுரம், 100 அடி ரோடு உள்ளிட்ட ஆறு இடங்களை, வானதி சீனிவாசன் நேற்று பார்வையிட்டார்.பாதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.அப்போது, அவர் கூறிய தாவது:கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடங்களில் மக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட போது அருகில் ஆட்கள் விழித்து இருந்ததால், உடனே தீயை அணைத்துள்ளனர்; இல்லையேல் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.குண்டு வீசப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்கள் என்ன நடக்குமோ என்ற பதட்டத்துடன் உள்ளனர்.


latest tamil newsதி.மு.க., ஆட்சியில் இருப்பதால், சமூக விரோதிகளுக்கு இவ்வளவு தைரியம் வந்துள்ளது. சிறுபான்மையினர் ஓட்டுக்காக, தி.மு.க., இதுபோன்ற சம்பவங்களை கண்டு கொள்ளால் இருக்கிறது.என்.ஐ.ஏ., சோதனை வாயிலாக, பி.எப்.ஐ., மற்றும் எஸ்.டி.பி.ஐ., போன்ற அமைப்புகளின் சதி திட்டங்கள் தெரிய வந்து உள்ளது.என்.ஐ,ஏ.,வுக்கு, மாநில அரசு ஒத்துழைப்பு அளித்தால், இன்னும் பல விஷயங்கள் வெளிவரும். முதல்வர் இந்த பிரச்னையில் தலையிட்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JaiRam - New York,யூ.எஸ்.ஏ
27-செப்-202218:04:18 IST Report Abuse
JaiRam தேச விரோதிகளை என்றாலே கார்ட்டுமரம் குரூப்தான்
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
27-செப்-202215:29:53 IST Report Abuse
Raj கலவரத்தாலேயே ஆட்சிக்கு வந்தவர்கள் நீங்கள். நாட்டில் கலவரம் செய்யும் அனைத்து சமூக விரோதிகளும் உங்கள், மற்றும் உங்கள் துணை அமைப்பை சேர்ந்தவர்கள் தான்.....
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
27-செப்-202215:02:06 IST Report Abuse
venugopal s ஆம், அப்படியே குஜராத்தில் நடந்த ரயில் எரிப்பு, அதைத் தொடர்ந்து நடந்த கலவரங்கள் எல்லாவற்றுக்கும் காரணம் திமுக தான் என்று சொல்லி விடுங்களேன்!
Rate this:
Anand - chennai,இந்தியா
27-செப்-202215:32:21 IST Report Abuse
Anandரயிலை எரித்தது உன்னோட கேடுகெட்ட கூட்டம், அதனால் தான் மிதி மிதி என மிதிப்பட்டார்கள்.... இருந்தும் மூர்க்க ஜந்துக்களுக்கு இன்னமும் கொழுப்பு அடங்கவில்லை.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X