சீமை கருவேல மரங்களை அகற்ற கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை : சீமை கருவேல மரங்களை அகற்ற, அனைத்து பஞ்சாயத்துகளையும் அறிவுறுத்தும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுதும் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை, தலைமை நீதிபதி உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து, அவ்வப்போது உத்தரவுகளை
Chennai High Court, Collector, சீமை கருவேலம், சென்னை ஐகோர்ட், சென்னை உயர் நீதிமன்றம், seemai karuvelam tree ,மரங்கள், கலெக்டர்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை : சீமை கருவேல மரங்களை அகற்ற, அனைத்து பஞ்சாயத்துகளையும் அறிவுறுத்தும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுதும் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை, தலைமை நீதிபதி உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து,அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்தது.சிறப்பு அமர்வுபின், இந்த வழக்குகள்,வனங்கள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அமர்வில், இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து, வனத் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர் வளத்துறை சார்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.நீர் வளத்துறை அறிக்கையில், 'தமிழகம் முழுதும், 4.90 லட்சம் ஏக்கர் பரப்பு நீர்நிலைகளில், சீமை கருவேல மரங்கள் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.'அவற்றில், 1.75 லட்சம் ஏக்கர் பரப்பில் இருந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.


latest tamil newsமீதியை படிப்படியாக அகற்ற டெண்டர் கோரப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.ஊரக வளர்ச்சித் துறை அறிக்கையில், 'கிராமப்புறங்களில், 6,750 ஏக்கரில் இருந்த சீமை கருவேல மரங்கள், 4.74 கோடி ரூபாய் செலவில் அகற்றப்பட்டுள்ளன' என்று கூறப்பட்டுள்ளது.டெண்டர்வனத் துறை அறிக்கையில், முதுமலை மற்றும் ஆனைமலை வனப் பகுதிகளில், 500 ஏக்கர் பரப்பில் வளர்ந்திருந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.அறிக்கைகளை பதிவு செய்த பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:நீர்நிலைகளில் உள்ள சீமை கருவேல மரங்களை படிப்படியாக அல்லாமல், மொத்தமாக அகற்ற வேண்டும். இதுகுறித்த டெண்டர் நடைமுறைகளை, மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும்.சீமை கருவேல மரங்களை அகற்றும்படி, தமிழகம் முழுதும் உள்ள பஞ்சாயத்துக்களுக்கு, மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்த வேண்டும். அதுகுறித்து மாதந்தோறும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.அகற்றப்பட்ட கருவேல மரங்களை ஏலம் விட, பஞ்சாயத்துக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். கருவேல மரங்களை அகற்றிய இடங்களில், நாட்டு மரங்களை நட வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விசாரணையை நவம்பர் 2க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
27-செப்-202212:32:53 IST Report Abuse
அசோக்ராஜ் //"கருவேல மரங்களை அகற்றிய இடங்களில், நாட்டு மரங்களை நட வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்"// எதே ...? ரியல் எஸ்டேட் செய்யக் கூடாதா? நாட்டு மரம் நடணுமா? அதுக்கு கருவேலமே கெடந்துட்டுப் போகட்டும்.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
27-செப்-202210:33:17 IST Report Abuse
jayvee அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அதிகாரிகளும் நீதிமன்றங்களை மதிப்பதில்லை என்பதை பல தசாப்தங்கலாக நடைபெறும் இந்த வழக்கு எடுத்துக்காட்டுகிறது
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
27-செப்-202207:00:02 IST Report Abuse
Girija ஒரு அரசியல் கட்சி மரம் வெட்டுவதில் திறமைசாலிகள் அவர்களிடம் இந்த பணியை கொடுத்தால் ஒரே நாளில் முடித்துவிடுவர்.
Rate this:
Raa - Chennai,இந்தியா
27-செப்-202212:52:02 IST Report Abuse
Raa:-)...
Rate this:
Raa - Chennai,இந்தியா
27-செப்-202212:53:18 IST Report Abuse
Raaசெவிடார்கள் காதில் ஊதிய சங்கு. எவ்ளோ வருஷமா இதை சொல்லிக்கொண்டுதான் உள்ளனர். யாரு கேக்கராங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X