'ஆன்லைன்' சூதாட்டத்துக்கு தடை: அமைச்சரவை ஒப்புதல்

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை : 'ஆன்லைன்' சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு, தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க, புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக, தமிழக அரசுக்கு அறிவுரை வழங்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.இக்குழு, ஜூன் 27ல் அறிக்கை அளித்தது. அந்த அறிக்கை அதே நாளில், அமைச்சரவை பார்வைக்கு
ஆன்லைன் சூதாட்டம், தடை,  அமைச்சரவை ஒப்புதல்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : 'ஆன்லைன்' சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு, தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க, புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக, தமிழக அரசுக்கு அறிவுரை வழங்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.



இக்குழு, ஜூன் 27ல் அறிக்கை அளித்தது. அந்த அறிக்கை அதே நாளில், அமைச்சரவை பார்வைக்கு வைக்கப்பட்டது.அதன்பின், பள்ளி மாணவர்களிடம் ஆன்லைன் விளையாட்டுகள் ஏற்படுத்தி உள்ள தாக்கம் குறித்து, பள்ளிக் கல்வித் துறை வாயிலாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு; பொது மக்களிடம் இ - மெயில் வழியே பெறப்பட்ட கருத்துகள் பரிசீலிக்கப்பட்டன.



latest tamil news


அவற்றின் அடிப்படையில், சட்டத் துறை ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசர சட்டம் தயாரிக்கப்பட்டது. இது, ஆக., 29ல் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது.அந்தக் கூட்டத்தில், அவசர சட்டத்தை மேலும் செம்மைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, செம்மைப்படுத்தப்பட்ட அவசர சட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. தமிழக அமைச்சரவை கூட்டம், நேற்று நடந்தது.



முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டம், அமைச்சரவை கூட்டத்தில் வைக்கப்பட்டது. அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த அவசர சட்டத்துக்கு, கவர்னர் ஒப்புதல் பெறப்பட்டு, விரைவில் நடைமுறைக்கு வரும் என, உள்துறை செயலர் பணீந்தர ரெட்டி தெரிவித்துள்ளார்.கூட்டம் நிறைவடையும் நேரத்தில், அமைச்சர்களிடம் பேசிய முதல்வர், சர்ச்சைக்குரிய முறையில் பேசுவதை தவிர்க்கும்படி, அறிவுரை வழங்கி உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KavikumarRam - Indian,இந்தியா
27-செப்-202213:57:12 IST Report Abuse
KavikumarRam தேவையான கட்டிங் வந்து எல்லா லாபமும் சம்பாதிச்சிட்டானுங்க போல..
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
27-செப்-202210:36:38 IST Report Abuse
jayvee வெறும் ஒரு மாநில அரசு மட்டும் செயல்படுத்தக்கூடிய சட்டம் அல்ல இது.. இன்டர்நெட் என்பது இந்தியஅளவில் பரவியுள்ள ஒன்று.. மத்திய அரசு தலையீடு இல்லாமல், இன்டர்நெட் நுழைவு வாசல் அமைப்புகளின் பங்களிப்பு இல்லாமல் இது நடக்க சாத்தியமல்ல.. தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசை ஒரு பிரதிவாதியாக சேர்த்து, தனியார் மாறும் அரசு இன்டர்நெட் சேவையாளர்களை சேர்த்து, வழக்கு தொடுக்கவேண்டும்..
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
27-செப்-202208:56:11 IST Report Abuse
duruvasar கும்மி என தமிழ்படுத்தபட்ட பாதுகாப்பான விளையாட்டை அனுமதிப்பார்கள். இது சிரங்கு கை. அரிக்கத் தான் செய்யும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X