கூடங்குளத்தால் மின் வாரியம் நிம்மதி!

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
சென்னை : பண்டிகை சீசனால் மின் தேவை அதிகரித்து வரும் நிலையில், திருநெல்வேலியில் உள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து கூடுதல் மின்சாரம் கிடைப்பதால், மின் வாரியம் நிம்மதி அடைந்து உள்ளது.தமிழகத்தில் கடும் வெயில் காரணமாக, ஏப்ரல், மே மாதங்களில் தினசரி மின் தேவை, 16 ஆயிரம் - 17 ஆயிரம் மெகா வாட்டை தாண்டியது. ஜூலை, ஆகஸ்டில் பல மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் மின் தேவை 15
Electricity, Kudankulam, TNEB, மின்சாரம், கூடங்குளம், மின் வாரியம், அணு மின்நிலையம், திருநெல்வேலி, Electricity Board, Nuclear Power Station, Tirunelveli,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphoneசென்னை : பண்டிகை சீசனால் மின் தேவை அதிகரித்து வரும் நிலையில், திருநெல்வேலியில் உள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து கூடுதல் மின்சாரம் கிடைப்பதால், மின் வாரியம் நிம்மதி அடைந்து உள்ளது.தமிழகத்தில் கடும் வெயில் காரணமாக, ஏப்ரல், மே மாதங்களில் தினசரி மின் தேவை, 16 ஆயிரம் - 17 ஆயிரம் மெகா வாட்டை தாண்டியது.ஜூலை, ஆகஸ்டில் பல மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் மின் தேவை 15 ஆயிரம் மெகா வாட் அளவுக்கு குறைந்தது.கடந்த வாரத்தில் வெயில் மிகவும் கடுமையாக இருந்தது. இதனால் மின் தேவை 16 ஆயிரத்து 500 மெகா வாட் தாண்டியது. மாலையில் மின் தேவையை பூர்த்தி செய்ய, ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களிடம் இருந்து மட்டுமின்றி, உடனடி மின்சார சந்தையிலும் தினசரி, 50 லட்சம் யூனிட் வரை மின்சாரம் வாங்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் மத்திய அரசுக்கு அணு மின் நிலையம் உள்ளது.latest tamil news


அங்கு ௨,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலிருந்து தமிழகத்திற்கு தினமும் 1,152 மெகா வாட் ஒதுக்கப்பட்டு உள்ளது. கூடங்குளம் முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்ப, ஜூலை 24 முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால், அங்கிருந்து தமிழகத்திற்கு ஒதுக்கியதில் பாதி மின்சாரம் மட்டும் கிடைத்தது.எரிபொருள் நிரப்பும் பணி முடிந்து, முதல் அணு உலையில், நேற்று முன்தினம் முதல் மின் உற்பத்தி துவங்கியுள்ளது.சில தினங்களில் ஆயுத பூஜை, விஜயதசமி என, தொடர்ந்து பண்டிகைகள் வருகின்றன. இதனால் மின் தேவை அ திகரித்து வருகிறது. இந்த சூழலில் கூடங்குளம் மின் நிலையத்தில் இருந்து, கூடுதல் மின்சாரம் கிடைப்பதால், மின் வாரியம் நிம்மதி அடைந்து உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V GOPALAN - chennai,இந்தியா
27-செப்-202213:55:07 IST Report Abuse
V GOPALAN Bangalre is the electronic city Just 15 km away from Hosur. But Hosur is full of Pigs only. Our politicians are worser than pigs
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
27-செப்-202210:39:13 IST Report Abuse
jayvee கூடங்குளம் அணு மின்னுலையை தடுக்க போராடிய வைகோவும் அந்த கிருத்துவ NGO தலைவரான உதயகுமாரும் இன்று திமுகவின் ஒரு அங்கம் என்பதை மக்கள் நினைவில் கொள்ளவேண்டும்.
Rate this:
Cancel
HONDA -  ( Posted via: Dinamalar Android App )
27-செப்-202208:17:49 IST Report Abuse
HONDA அப்படி இருந்தும் எங்க பகுதியில் மின் நிறுத்தம் ஏன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X