சென்னை, புதுச்சேரியில் மதுரை நிர்வாகிகள் 'குஷி': தி.மு.க.,விலும் 'கூவத்துார் கூத்து'

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
மதுரை : மதுரை நகர் தி.மு.க., செயலர் பதவிக்கு போட்டியிடும் தளபதி எம்.எல்.ஏ., இளைஞரணி செயலர் அதலை செந்தில் தரப்பில், தங்கள் ஆதரவு நிர்வாகிகள் நுாற்றுக்கும் மேற்பட்டோரை, 'கூவத்துார் ஸ்டைலில்' ஹோட்டல்களில் சகல 'கவனிப்புடன்' தங்க வைத்துள்ளனர்.தி.மு.க., மாவட்ட செயலர் பதவிக்கு தேர்தல் நடக்கவுள்ளது.இதற்கான மனுத்தாக்கல் மீதான பரிசீலனை துவங்கியுள்ளது. மொத்தமுள்ள 72 மாவட்ட
சென்னை, புதுச்சேரி, மதுரை நிர்வாகிகள், குஷி,  தி.மு.க., கூவத்துார் கூத்து,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை : மதுரை நகர் தி.மு.க., செயலர் பதவிக்கு போட்டியிடும் தளபதி எம்.எல்.ஏ., இளைஞரணி செயலர் அதலை செந்தில் தரப்பில், தங்கள் ஆதரவு நிர்வாகிகள் நுாற்றுக்கும் மேற்பட்டோரை, 'கூவத்துார் ஸ்டைலில்' ஹோட்டல்களில் சகல 'கவனிப்புடன்' தங்க வைத்துள்ளனர்.தி.மு.க., மாவட்ட செயலர் பதவிக்கு தேர்தல் நடக்கவுள்ளது.



இதற்கான மனுத்தாக்கல் மீதான பரிசீலனை துவங்கியுள்ளது. மொத்தமுள்ள 72 மாவட்ட செயலர் பதவிகளில் சென்னை, மதுரை, தென்காசி உட்பட சில மாவட்டங்களில் கடும் போட்டி நிலவுகிறது.மதுரையில் கட்சி தேர்தல் போல இல்லாமல் இரண்டு அமைச்சர்கள் தங்கள் 'பவரை' நிரூபிக்கும் களமாக மாறியுள்ளது.இதனால் வட்டம், பகுதி செயலர்களுக்கு லட்சங்களில் 'கவனிப்பு', கட்சிப் பதவிகள் உறுதிமொழிகள் அளிக்கப்பட்டுள்ளன.


latest tamil news



நிர்வாகிகள் முகாம் மாறி விடக் கூடாது என்பதற்காக முதற்கட்ட கவனிப்பு முடிந்ததும் ரயில், விமானம் மூலம் சென்னை, புதுச்சேரிக்கு அழைத்து சென்று சொகுசு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதனால் மதுரையில் தி.மு.க., நிர்வாகிகள் முகாம் காலியாகி உள்ளது.நிர்வாகிகள் கூறியதாவது:மதுரை நகர் தி.மு.க.,வில் வட்டச் செயலர்கள் 71, பகுதி செயலர்கள் 18 பேர் உள்ளனர். ஒரு பகுதிக்கு 4 அல்லது 5 என்ற எண்ணிக்கையில் 70க்கும் மேல் மாவட்ட பிரதிநிதிகள் உள்ளனர்.தேர்தல் நடந்தால் வட்டச் செயலர்கள் ஆதரவுடன் பகுதி, மாவட்ட பிரதிநிதிகள் ஓட்டளிப்பர். இதில் தளபதிக்கு 51 வட்ட செயலர், 6 பகுதி செயலர்களும், அதலை செந்திலுக்கு 15 வட்ட செயலர், 12 பகுதி செயலர்களும் ஆதரவு உள்ளது.மாவட்ட பிரதிநிதிகள் ஆதரவு இருவருக்கும் சமமாக உள்ளது.



இன்று சென்னையில் மதுரை முடிவு தெரியவுள்ளது.இதனால் ஆதரவாளர்கள் தளபதி தரப்பில் புதுச்சேரியிலும், அதலை செந்தில் தரப்பில் சென்னை மாமல்லபுரம் சொகுசு ஹோட்டல்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெளியேற அனுமதியில்லை. ஹோட்டலுக்குள் அனைத்து 'வசதி'களும் செய்யப்பட்டுள்ளன. அ.தி.மு.க.,வில் நடந்த 'கூவத்துார்' சம்பவத்தை தி.மு.க., விமர்சனம் செய்தது. தற்போது தி.மு.க.,விலும் சாதாரண நகர் செயலர் தேர்தலில் அதே காட்சி இரண்டு இடங்களில் அரங்கேறியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
27-செப்-202216:49:45 IST Report Abuse
INDIAN Kumar அதிமுகவுக்கும் திமுகவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
27-செப்-202214:34:42 IST Report Abuse
Lion Drsekar பழைய பாடல்களில் எவ்வளவு தத்துவங்கள் அனைத்துமே சரித்திரத்தில் இடம்பெற்றுள்ளது .
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
27-செப்-202214:17:17 IST Report Abuse
vpurushothaman முற்பகல் செய்தது பிற்பகலில் விளைகிறது. அப்படி என்ன " பசை" யுள்ள பதவிகளோ ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X