ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி

Added : செப் 27, 2022 | |
Advertisement
புதுடில்லி: ஜப்பான் முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று (செப்.,27) ஜப்பான் சென்றடைந்தார்.ஜப்பான் முன்னாள் பிரதமரும், லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் மூத்த தலைவருமான ஷின்சோ அபே, கடந்த ஜூலை 8ம் தேதி அந்நாட்டின் நரா நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். ஜப்பானின் நீண்ட நாட்கள் பிரதமராக பணியாற்றியவர் என்ற பெருமை
Japan, Shinzo Abe, PM Modi, ஜப்பான், ஷின்சோ அபே,பிரதமர் மோடி, பிமியோ கிஷிடா, Prime Minister Modi, Bimiyo Kishida,


புதுடில்லி: ஜப்பான் முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று (செப்.,27) ஜப்பான் சென்றடைந்தார்.

ஜப்பான் முன்னாள் பிரதமரும், லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் மூத்த தலைவருமான ஷின்சோ அபே, கடந்த ஜூலை 8ம் தேதி அந்நாட்டின் நரா நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். ஜப்பானின் நீண்ட நாட்கள் பிரதமராக பணியாற்றியவர் என்ற பெருமை கொண்டவர் என்பதால் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கை மிக பிரமாண்டமான முறையில் நடத்த ஜப்பான அரசு திட்டமிட்டது.

அதன்படி இன்று (செப்.,27) இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை ஜப்பான் பயணம் செய்கிறார். ஜப்பானின் தற்போதைய பிரதமரான பிமியோ கிஷிடாவை பிரதமர் மோடி தனியாக சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு நாளுக்கும் குறைவாகவே ஜப்பானில் பிரதமர் மோடி இருக்க உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X