வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : தமிழகத்தில், 23 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக பகுதிகளின் மேல் நிலவும், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
சென்னையில் சில இடங்களில், லேசான மழை பெய்யும். அதிகபட்சம், 27 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும்.நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலுார், தஞ்சாவூர், நாகை, கடலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்துார் உள்ளிட்ட மாவட்டங்களில், இன்றும், நாளையும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
![]()
|
நேற்று காலை நிலவரப்படி, திருச்சி புடலுாரில், 17 செ.மீ., மழை பெய்துள்ளது. கல்லணை, 15; தஞ்சாவூர், வல்லம், 12; பொன்மலை, திருச்சி, 11; துவாக்குடி, 10 செ.மீ., மழை பெய்துள்ளது.தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில், இலங்கைக்கு தெற்கு பகுதியில் மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, நாளை இந்த பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.