ஒரு மாநில அரசு மற்றொரு மாநிலத்தில் விளம்பரம் செய்ய அனுமதிக்கலாமா?

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
புதுடில்லி : ஒரு மாநில அரசு, தன் எல்லைக்கு வெளியே உள்ள மற்றொரு மாநிலத்தில் பத்திரிகை விளம்பரம் செய்ய அனுமதிக்கலாமா என்பது குறித்து பதிலளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.'காமன் காஸ்' எனப்படும் அரசு சாரா அமைப்பின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், ஹீமா கோஹ்லி அடங்கிய அமர்வில் இது நேற்று
Supreme Court, Prashant Bhushan, Advertising, விளம்பரம், உச்ச நீதிமன்றம் , பிரஷாந்த் பூஷண், State Government,  மாநில அரசு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



புதுடில்லி : ஒரு மாநில அரசு, தன் எல்லைக்கு வெளியே உள்ள மற்றொரு மாநிலத்தில் பத்திரிகை விளம்பரம் செய்ய அனுமதிக்கலாமா என்பது குறித்து பதிலளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



'காமன் காஸ்' எனப்படும் அரசு சாரா அமைப்பின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், ஹீமா கோஹ்லி அடங்கிய அமர்வில் இது நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது அந்த அமைப்பின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் வாதிட்டதாவது:


latest tamil news



ஒரு மாநில அரசு தன் எல்லைக்கு அப்பாற்பட்ட மற்றொரு மாநிலத்தில் உள்ள பத்திரிகைகளில் விளம்பரம் செய்கிறது. குறிப்பாக தேர்தல் நடக்கும் நேரத்தில் இது செய்யப்படுகிறது. மக்கள் வரிப்பணத்தில் இருந்து மாநில அரசுகள் எப்படி இவ்வாறு விளம்பரம் செய்யலாம். தேவைப்பட்டால், கட்சியின் சார்பில் விளம்பரம் செய்யலாமே? இவ்வாறு அவர் வாதிட்டார்.



இதற்கு அமர்வு கூறியதாவது:தன் மாநிலத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தங்களுடைய அரசு செய்துள்ள திட்டங்கள், மாநிலத்தில் உள்ள வசதிகள் குறித்து ஒரு மாநில அரசு விளம்பரம் செய்திருக்கலாம். இதை எப்படி தடுக்க முடியும்? இவ்வாறு அமர்வு கூறியது.'புதுடில்லியில் கொரோனா நிவாரணம் வழங்கியது குறித்து நாடு முழுதும் எதற்கு விளம்பரம் செய்ய வேண்டும்' என, பிரஷாந்த் பூஷண் வாதிட்டார்.இதையடுத்து, இது குறித்து பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vadivelu - thenkaasi,இந்தியா
27-செப்-202214:23:20 IST Report Abuse
vadivelu மத்திய அரசு மட்டுமே தங்கள் திட்டங்களையும், செய்த செயல்களையும் இந்தியா முழுதும் அரசு செலவில் விளம்பர படுத்தலாம், அதில் தவறு இல்லை. மாநிலங்கள் தங்கள் செயல்பாடு, திட்டங்களை தங்கள் மாநிலத்தில் அரசு செலவில் விளம்பர படுத்தி கொள்ளலாம்.ஆனாலும் எங்கும் கட்சி செலவில் தம்பட்டம் போட்டு கொள்ளா எல்லா மாநில கட்சிகளுக்கும் உரிமை உண்டு.
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
27-செப்-202214:11:15 IST Report Abuse
பாமரன் ..//..தன் மாநிலத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தங்களுடைய அரசு செய்துள்ள திட்டங்கள், மாநிலத்தில் உள்ள வசதிகள் குறித்து ஒரு மாநில அரசு விளம்பரம் செய்திருக்கலாம். இதை எப்படி தடுக்க முடியும்? இவ்வாறு அமர்வு கூறியது...///.. ,.🤣🤣.
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
27-செப்-202213:56:32 IST Report Abuse
sankaranarayanan அப்போ பேனா கானா மல் போயிடுமா? வீணா ஏனோ இந்த விதன்டாவாதம் - வேண்டாம் வேண்டாம் வேண்டவே வேண்டாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X