பத்திரப் பதிவுக்கு அசல் ஆவணம் தேவையா?

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
சென்னை : 'சொத்து விற்பனையின்போது, பழைய அசல் பத்திரங்களை சரிபார்க்க வேண்டியது கட்டாயம்' என, பதிவுத் துறை தலைவர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்துவதில் குழப்பம் ஏற்பட்டுஉள்ளது.அசல் தாய்ப்பத்திரம் இல்லாத சொத்துக்களை பதிவு செய்ய, பதிவுத் துறை தடை விதித்துஉள்ளது.இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சண்முகவேல் என்பவரின் மனு தொடர்பாக, பதிவுத் துறை பிறப்பித்த
பத்திரப் பதிவு, அசல் ஆவணம், தேவையா,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



சென்னை : 'சொத்து விற்பனையின்போது, பழைய அசல் பத்திரங்களை சரிபார்க்க வேண்டியது கட்டாயம்' என, பதிவுத் துறை தலைவர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்துவதில் குழப்பம் ஏற்பட்டுஉள்ளது.அசல் தாய்ப்பத்திரம் இல்லாத சொத்துக்களை பதிவு செய்ய, பதிவுத் துறை தடை விதித்துஉள்ளது.



இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சண்முகவேல் என்பவரின் மனு தொடர்பாக, பதிவுத் துறை பிறப்பித்த உத்தரவு:இதில், மனுதாரரிடம் அசல் பத்திரம் இல்லை. அவரது சகோதரியிடம் இருப்பதாக, மனுதாரர் தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தை அவர் காட்டியுள்ளார்.எனவே, இதை கருத்தில் வைத்து அசல் ஆவணம் கேட்காமல், சண்முகவேலின் பத்திரத்தை பதிவு செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



latest tamil news


இதுகுறித்து, சார் - பதிவாளர்கள் கூறியதாவது:ஒரு நபரிடம் அசல் தாய்ப்பத்திரம் இல்லாத நிலையில், அது குறித்த நிலவரத்தை, அவர் ஆதாரத்துடன் தாக்கல் செய்தால், பதிவுக்கு ஏற்கலாம் என்பதற்கு, இது புதிய வழிகாட்டுதலாக அமைந்துள்ளது. இதனால், பழைய அசல் ஆவணம் இல்லாத சொத்துக்களை பதிவு செய்ய வேண்டாம் என்ற, முந்தைய உத்தரவு கேள்விக்குறியாகி உள்ளது.இந்த விஷயத்தில், என்னென்ன நிலைகளில் விதிவிலக்குகள் தேவைப்படுகின்றன என்பதை ஆராய்ந்து, அதை தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mupaco - Madurai,இந்தியா
27-செப்-202213:08:06 IST Report Abuse
mupaco Ivai ellam ungal pathivugal thaane.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
27-செப்-202210:46:40 IST Report Abuse
jayvee தாய் பத்திரம், மூல பத்திரம் .. இது என்ன ஒரே தலைவலியா இருக்கே .. உபீஸ் மனக்குமுறல்
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
27-செப்-202209:39:30 IST Report Abuse
அசோக்ராஜ் ஆதார் நடைமுறைக்கு வந்து வருடங்கள் ஆகி விட்டன. தாய்ப் பத்திரம் தொலைத்தவரின் அடையாளத்தை எளிதாக உறுதி செய்து கொண்டு சர்ட்டிஃபைடு காப்பி மற்றும் அஃபிடவிட்டுடன் தொடர் பதிவுகளை அனுமதிக்க இயலும். ஆனால் எதிலும் லஞ்ச வாய்ப்புக்கு அலையும் பதிவாளரும் போலீஸும் தற்போதைய நடைமுறையில் நன்றாக "சம்பாதிக்கிறார்கள்". இரு மொழிகளில் செய்தித்தாள் விளம்பரம், போலீஸ் சிஎஸ்ஆர் மற்றும் நாட் டிரேசபிள் சர்ட்டிஃபிகேட், நோட்டரைஸ்டு அஃபிடவிட், வக்கீல் ஃபீஸ் இத்தனையும் தாண்டி கால விரயம். இதற்கு மேல் பதிவு செய்யும்போது அது பெண்டிங்கில் போடப்படுகிறது. ஏன் என்றால் போலீஸ் சர்ட்டிஃபிகேட்டின் உண்மைத்தன்மை அறிய மீண்டும் பதிவாளர் போலீஸுக்கு கடிதம் எழுதி விட்டு கிடப்பில் போட்டு விடுவார். குடிமகன் இரண்டாம் முறை போலீசுக்கு லஞ்சம் அழுது உண்மைத்தன்மை சான்றிதழ் வாங்கி வர வேண்டும். சொத்தின் மதிப்புக்கேற்ப ரிபீட் லஞ்சம் பல லகரங்கள் எகிறும். எனவே, தாய்ப்பத்திரம் கட்டாயப்படுத்தும் விதியைக் களைந்து விட்டு ஆதார் ஈ-கேஒய்சியுடன் நிறுத்திக் கொள்வது சரியாக இருக்கும். ஆனால் பதிவாளரும் போலீஸும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். விடியல் அரசு அவர்களை சம்பாதிக்க விட்டு தன் அடிமை ஆக்கிக்கொள்ளும். வரி கட்டுபவன் தொடர்ந்து இழந்து கொண்டே போக வேண்டியதுதான். த்ராவிஷம் வெல்லும்.
Rate this:
Layman - Chennai,இந்தியா
27-செப்-202212:47:38 IST Report Abuse
Laymanமிக சரியான கருத்து...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X