'பாரத் கவுரவ்' ரயில் திட்டம்; ரூ.5.50 கோடி வருவாய்

Added : செப் 27, 2022 | |
Advertisement
சென்னை : 'பாரத் கவுரவ்' திட்டத்தால், தெற்கு ரயில்வேக்கு 5.50 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களை, மக்கள் கண்டுகளிக்கும் வகையில், பாரத் கவுரவ் திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் 23ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
'பாரத் கவுரவ்' ரயில் திட்டம்;  ரூ.5.50 கோடி வருவாய்


சென்னை : 'பாரத் கவுரவ்' திட்டத்தால், தெற்கு ரயில்வேக்கு 5.50 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:



இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களை, மக்கள் கண்டுகளிக்கும் வகையில், பாரத் கவுரவ் திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் 23ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் ரயில்களை இயக்குவது மட்டுமே, ரயில்வே நிர்வாகத்தின் பொறுப்பு; மற்ற சேவைகளை, தனியார் நிறுவனங்கள் கவனித்து வருகின்றன.



பாரத் கவுரவ் ரயில்களை இயக்க, இதுவரையில் ஒன்பது நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன; ஐந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் வாயிலாக, தெற்கு ரயில்வேக்கு 5.5 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளது.எத்தனை பெட்டிகள் பயன்படுத்துகின்றனர்; எத்தனை கி.மீ., இயக்கப்படுகிறது;



நாள் ஒன்றுக்கு கட்டணம் எவ்வளவு போன்ற பல்வேறு பிரிவுகளில் கணக்கிட்டு, ரயில்வே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இந்த வகை ரயில்களை இயக்க, சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.எனவே, வரும் மாதங்களில் இந்த பிரிவுகளில், தெற்கு ரயில்வேக்கு மேலும் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X