தற்கொலையை தடுப்பது குறித்து 'வாழ்வோம் வாழ்விப்போம்' என உறுதிமொழி; செவிலியர்கள் அசத்தல்

Added : செப் 27, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
மதுரை : மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் நர்சிங் படித்த 169 செவிலியர்கள் நேற்று ஒன்றுக்கூடி தற்கொலையை தடுப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதுவரை கவுன்சிலிங் கொடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உயிர்களை இவர்கள் காப்பாற்றி உள்ளனர்.மதுரை அரசு மருத்துவக்கல்லுாரியில் 2004-07 ல் நர்சிங் படித்த 169 பேர் இன்று பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணிபுரிகின்றனர்.
Madurai, Suicide, Nurses, மதுரை, தற்கொலை, செவிலியர்கள், வாழ்வோம் வாழ்விப்போம், உறுதிமொழி,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



மதுரை : மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் நர்சிங் படித்த 169 செவிலியர்கள் நேற்று ஒன்றுக்கூடி தற்கொலையை தடுப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதுவரை கவுன்சிலிங் கொடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உயிர்களை இவர்கள் காப்பாற்றி உள்ளனர்.மதுரை அரசு மருத்துவக்கல்லுாரியில் 2004-07 ல் நர்சிங் படித்த 169 பேர் இன்று பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணிபுரிகின்றனர். அவ்வப்போது இவர்கள் சந்தித்து வந்தனர். தங்கள் சந்திப்பு பயனுள்ளதாக இருக்க வேண்டும் எனக்கருதினர்.



இதற்கான முயற்சியை சென்னை புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி., அருண்மொழி எடுத்தார்.மதுரையில் நேற்று 169 பேரும் 'வாழ்வோம், வாழ்விப்போம்' என்ற பெயரில் ஒன்று கூடினர். தற்கொலை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் தமிழகத்தில் முதன்முறையாக இந்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.


latest tamil news



நமது நிருபரிடம் டி.எஸ்.பி., அருண்மொழி கூறியதாவது: இரண்டு ஆண்டுகளாகவே நாங்கள் தற்கொலை முயற்சியை தடுக்க கவுன்சிலிங் கொடுத்து வருகிறோம். நர்ஸிங் படித்த நான் 2019ல் டி.எஸ்.பி.,யாகி விட்டாலும் நண்பர்களுடன் சேர்ந்து இப்பணியை செய்து வருகிறேன். அரசின் இலவச டோல் ப்ரீ எண் '104'க்கு போன் செய்தால் எங்களுக்கு தகவல் தெரிவிப்பர். அருகில் இருந்தால் நேரில் சென்று கவுன்சிலிங் கொடுப்போம். இல்லாதபட்சத்தில் போனிலேயே கவுன்சிலிங் கொடுப்போம்.



இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உயிரை காப்பாற்றி உள்ளோம். தற்கொலை தீர்வு அல்ல என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.தவிர அரசு போட்டித் தேர்வுகளுக்கு இளைஞர்களை தயார்படுத்தும் ஏ.பி.ஜே., இலவச கோச்சிங் வகுப்பை நடத்தி வருகிறோம். இதுவரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
27-செப்-202216:47:28 IST Report Abuse
NicoleThomson வணங்குகிறேன் ....
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
27-செப்-202214:12:31 IST Report Abuse
vpurushothaman சபாஷ் செவிலியர்களே. சரியான நேரத்தில் சரியாக எடுக்கப்பட்ட முடிவு. நீடூழி வாழ்க.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
27-செப்-202210:49:11 IST Report Abuse
jayvee மதுரை அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் செவிலியர்களும் மருத்துவர்களும் முதலில் ஒழுங்காக நோயாளிகளை மரியாதையுடன் நடத்துவோம் என்று உறுதி மொழி எடுக்கட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X