'தினமலர்' சார்பில் அரிச்சுவடி ஆரம்பம்: சென்னையில் அக்., 5ல் நடக்கிறது

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை: 'தினமலர்' நாளிதழ் சார்பில் இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பித்து வைக்கும், 'அ'னா, 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி, அக்., 5ம் தேதி சென்னையில் வடபழநி, பெரம்பூர், தாம்பரத்தில் நடைபெற உள்ளது.விஜயதசமி திருநாள் அக்., 5ம் தேதி வருகிறது. அன்று வித்யாரம்பத்துக்கு உகந்த நாள். எனவே அன்று, 'தினமலர்' நாளிதழ் சார்பில், இளந்தளிர்களின் பிஞ்சு

சென்னை: 'தினமலர்' நாளிதழ் சார்பில் இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பித்து வைக்கும், 'அ'னா, 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி, அக்., 5ம் தேதி சென்னையில் வடபழநி, பெரம்பூர், தாம்பரத்தில் நடைபெற உள்ளது.

விஜயதசமி திருநாள் அக்., 5ம் தேதி வருகிறது. அன்று வித்யாரம்பத்துக்கு உகந்த நாள். எனவே அன்று, 'தினமலர்' நாளிதழ் சார்பில், இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பித்து வைக்கும், 'அ'னா, 'ஆ'வன்னா' அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி, சென்னையில் வடபழநி, பெரம்பூர், தாம்பரம் ஆகிய மூன்று இடங்களில் நடக்கின்றன.latest tamil news
இதில் கல்வியாளர்கள், ஐ.பி.எஸ்., அதிகாரிகள், கலைத்துறை வித்தகர்கள், புகழ்பெற்ற டாக்டர்கள், ஆடிட்டர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பித்து வைக்கின்றனர்.காலை 8:30 மணி முதல் 10:30 மணி வரை நடக்கும் நிகழ்ச்சியில், மூன்றரை வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பங்கேற்கலாம்.

அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியில், உங்கள் வீட்டு குழந்தைகளை பங்கேற்க வைத்து கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைக்க அனைவரும் வாருங்கள். அனுமதி இலவசம்; முன்பதிவு அவசியம்.குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முழு முகவரி, மொபைல் போன் ஆகிய விபரங்களை தாங்கள் பங்கேற்க விரும்பும் பகுதிக்கு என குறிப்பிடப்பட்டு உள்ள மொபைல் எண்ணுக்கு, 'வாட்ஸ் ஆப்' அனுப்பி, பதிவு செய்ய வேண்டும்.
அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும். இந்நிகழ்ச்சியை 'தினமலர்' நாளிதழுடன் இணைந்து எவர்வின் கல்வி குழுமம் நடத்துகிறது.


எந்தெந்த இடங்கள்?l வடபழநி: அருள்மிகு வடபழநி ஆண்டவர் கோவில், வடபழநி, சென்னை - 26 / 99443 09681
l பெரம்பூர்: எவர்வின் வித்யாஷ்ரம், 32/ 134 பெரம்பூர் நெடுஞ்சாலை, பெரம்பூர், சென்னை - 12 / 98843 91342
l தாம்பரம்: ஸ்ரீசங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி, 39, வேளச்சேரி மெயின் ரோடு, சென்னை - 59/ 97511 36644.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
27-செப்-202214:06:39 IST Report Abuse
தமிழன் ..........
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
27-செப்-202212:02:26 IST Report Abuse
Lion Drsekar இந்த செய்தியை படிக்கும்போதே கண்களில் நீர்மல்கிறது . . தற்போது அரைவேமறந்து போன இந்த அரிச்சுவடி மீண்டும் ஆரம்பம் அதுவும் திருக்கோவில் . பாராட்டுக்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X