குழந்தை திருடன் என நினைத்து அரசு அதிகாரிகள் மீது தாக்குதல்: இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
குழந்தை திருடன் என நினைத்துஅரசு அதிகாரிகள் மீது தாக்குதல்விஜயபுரா : குழந்தை திருடன் என நினைத்து, கிராமத்தினர் அரசு அதிகாரிகளை தாக்கினர்.விஜயபுராவின் ஹிரேபேவனுார் கிராமத்தில் ஏராளமான கனிம வளங்கள் இருப்பதாக, குவாரி மற்றும் நில அறிவியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பெங்களூரில் இருந்து அதிகாரிகள் நேற்று ஹிரேபேவனுார் கிராமத்துக்கு
Crime, Murder, Police, Arrested,குழந்தை திருடன் என நினைத்துஅரசு அதிகாரிகள் மீது தாக்குதல்விஜயபுரா : குழந்தை திருடன் என நினைத்து, கிராமத்தினர் அரசு அதிகாரிகளை தாக்கினர்.விஜயபுராவின் ஹிரேபேவனுார் கிராமத்தில் ஏராளமான கனிம வளங்கள் இருப்பதாக, குவாரி மற்றும் நில அறிவியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பெங்களூரில் இருந்து அதிகாரிகள் நேற்று ஹிரேபேவனுார் கிராமத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.அப்போது, அவர்களை பார்த்த அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் அதிகாரிகளிடம், என்ன செய்கிறீர்கள் என கேட்டார்.

அதற்கு அதிகாரிகள் சரியான பதிலை சொல்லவில்லை. இது விவசாயிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் குழந்தைகள் திருடர்களாக இருக்கலாம் என நினைத்து, கிராமத்தினரை சத்தம் போட்டு வரவழைத்தார்.அங்கு வந்த கிராமத்தினரும், விவசாயிகளின் பேச்சை கேட்டு, அதிகாரிகளை சராமாரியாக அடித்தனர். அதன்பிறகு அவர்கள் அதிகாரிகள் என்பது தெரியவந்து, மன்னிப்பு கேட்டனர்.வரதட்சணை கொடுமை மதுரை போலீஸ்காரர் கைதுமதுரை : திருமணமான 6 மாதங்களில் வரதட்சணை கொடுமையால் மனைவி இறந்த வழக்கில், மதுரை ஆறாவது சிறப்பு பட்டாலியன் போலீஸ்காரர் மாரிமுத்து 30, கைது செய்யப்பட்டார்மாரிமுத்து மனைவி திவ்யா 26. ஆறு மாதங்களுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடந்தது. பட்டாலியன் குடியிருப்பில் கணவருடன் வசித்து வந்த நிலையில், ஆக.,26 ல் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கொடுமை மற்றும் மாரிமுத்துவின் நடத்தையால் திவ்யா தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் சித்திரைச்செல்வி புகார் தெரிவித்தார்.

திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் இறந்தால் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்படும். மதுரை ஆர்.டி.ஓ., விசாரித்தார். திவ்யாவுக்கு வரதட்சணை கொடுமை நடந்தது உறுதியானது. ஆர்.டி.ஓ., பரிந்துரைபடி தல்லாகுளம் போலீசார் வரதட்சணை கொடுமை, அதன் காரணமாக இறப்பு ஆகிய பிரிவுகளின்கீழ் மாரிமுத்துவை கைது செய்தனர். அவரை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கர்நாடகா 'சரக்கு' பறிமுதல்நெகமத்தில் 5 பேர் கைதுlatest tamil newsபொள்ளாச்சி : கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி, நெகமம் நான்கு ரோட்டில், போலீஸ் எஸ்.ஐ., முகமது தலைமையிலான போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.காரில், கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்பட்ட, 243 மதுபான பாட்டில்கள், இருப்பதை கண்டறிந்து காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மீனாட்சிபுரத்தை சேர்ந்த உதயகுமார்,41, அகிலாண்டபுரம் சபரிகிரிவாசன்,39, ஆத்துப்பொள்ளாச்சி செந்தில்வேல்,53, திருப்பூர் முகமதுபஷீர், 25, ஆனைமலை சபரிநாதன், 32, என்பதும், கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து, ஆனைமலைக்கு மதுபானத்தை கொண்டு வந்ததும் தெரியவந்தது. 'சரக்கு' பாட்டில்களையும், காரையும் பறிமுதல் செய்த போலீசார், ஐந்து பேரை கைது செய்தனர்.


மாமியாரை எரித்து கொல்ல முயன்ற மருமகள் கைதுகடலுார் : மாமியாரை உயிருடன் எரித்துக் கொலை செய்ய முயன்ற மருமகளை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பெரியநற்குணத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி மனைவி சிந்தாமணி, 65; இவரது இளைய மகன் வேல்முருகன், 37.இவருக்கும், இவரது சகோதரி மகள் சங்கீதா, 34, என்பவருக்கும், 15 ஆண்டிற்கு முன் திருமணம் நடந்தது; இரண்டு மகன்கள் உள்ளனர்.கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா தனியாக வசித்து வந்தார். ஒரு மாதத்திற்கு முன் வேல்முருகன் சமாதானம் பேசி, சங்கீதாவை அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்தார்.சங்கீதா அடிக்கடி மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்ததை, மாமியார் சிந்தாமணி கண்டித்ததால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.


latest tamil news
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சிந்தாமணி வீட்டிற்குள் சென்று பால் பாக்கெட் எடுத்தார். அப்போது, சங்கீதா தயார் நிலையில் வைத்திருந்த பெட்ரோலை மாமியார் சிந்தாமணி மீது ஊற்றி தீவைத்து விட்டு வெளியே வந்து கதவை பூட்டி விட்டார்.அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் சிந்தாமணியை மீட்டனர். அவர், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.சிந்தாமணியிடம் சிதம்பரம் மாஜிஸ்திரேட் சக்திவேல் வாக்குமூலம் பெற்றார். அதில், மருமகள் சங்கீதா தான், தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து, மருமகள் சங்கீதாவை சேத்தியாத்தோப்பு போலீசார் கைது செய்தனர்.


நுாதன முறையில் பெண்ணிடம் செயின் 'அபேஸ்'ஊத்துக்கோட்டை : எல்லாபுரம் ஒன்றியம், பெரம்பூர், பாஞ்சாலி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி எல்லம்மாள், 55. நேற்று மதியம் அங்குள்ள சாலையில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த, 35 வயது மதிக்கத்தக்க பெண், தான் தாலுகா அலுவலகத்தில் இருந்து வருவதாகவும், நீங்கள் முதியோர் உதவித்தொகை வாங்குகிறீர்களா என பேச்சு கொடுத்தார்.பின், அங்குள்ள அம்மன் கோவில் அருகில், அவரை அழைத்து சென்று நீங்கள் வாங்கும் முதியோர் உதவித்தொகை குறித்த தகவல்கள் வேண்டும் என கூறியுள்ளார்.

பின், ஒரு போட்டோ எடுக்க வேண்டும். உங்கள் செயினை கொடுங்கள் என கூறியுள்ளார். இதை நம்பிய எல்லம்மாள் தான் அணிந்திருந்த மூன்று சவரன் நகையை கொடுத்துள்ளார்.அதை போட்டுக் கொண்டு 'செல்பி' எடுத்து கொண்டு மொபைல்போனில் பேசுவது போல் நடித்து, பைக்கை எடுத்துக் கொண்டு சென்று விட்டார்.எல்லம்மாள், ஊத்துக்கோட்டை போலீசில் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்குப் பதிந்து மர்ம பெண்ணை தேடி வருகின்றனர்.


வெடிகுண்டு பதுக்கிய மூவர்; பிடிபட்டவர் தப்பியோட்டம்ஸ்ரீவில்லிபுத்துார் : தென்னந்தோப்பில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கப்பட்ட வழக்கில், மூவரை போலீசார் பிடித்தனர்.

இதில், ஒருவர் ஸ்ரீவில்லிபுத்துார் வனத்துறை அலுவலகத்திலிருந்து தப்பினார்.விருதுநகர் மாவட்டம், கான்சாபுரம் அத்திகோவில் ரோட்டிலுள்ள தென்னந்தோப்பில் வெடிகுண்டுகள் பதுக்கியது தொடர்பாக கார்த்திக், 22, தேவராஜ், 25, டேனியல் ராஜ்குமார், 22, ஆகியோரை வத்திராயிருப்பு போலீசார் பிடித்து, நேற்று முன்தினம் ஸ்ரீவில்லிபுத்துார் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

வனத்துறை அலுவலகத்தில் அவர்களிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு டேனியல் ராஜ்குமார் இயற்கை உபாதைக்காக சென்றவர் தப்பினார்.நகர் போலீசில் வனத்துறையினர் புகார் செய்தனர்.இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் அவரை தேடுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
28-செப்-202204:41:29 IST Report Abuse
சாண்டில்யன் திருட்டு கொலை கொள்ளை POSCO குற்றங்கள் எல்லாவற்றிலும் கோட்டா
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
27-செப்-202214:46:11 IST Report Abuse
sankar பி ஜே.பி ஆளுற மானிலங்களில் சரக்கு போதை ரொம்ப ஜாஸ்தின்னு பிஜேபீகாரனே சொல்றான்.
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
27-செப்-202210:44:33 IST Report Abuse
sankar கர்நாடகாவில் நடந்த சின்னதா செய்தி போடுவீங்க . இங்கே நடந்தா ...
Rate this:
27-செப்-202214:56:53 IST Report Abuse
ராஜாஅது சரி விடியலுக்கு எதிராக சத்தமா காத்து கூட விடாத RSB செய்தி ஊடகங்களை என்ன சொல்லுவ!?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X