தென் மாவட்டங்களுக்கான அரசு பஸ்கள் 'ஹவுஸ்புல்'

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சேலம் : பெங்களூருவில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தொழில் நகரங்கள் வழியாக இயக்கப்படும் பஸ்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டது. இதனால் சேலம் நாமக்கல் கரூர் மாவட்ட பயணியர் முன்பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் நாமக்கல் கரூர் வழியாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் நெல்லை
TNSTC, bus, SETC

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சேலம் : பெங்களூருவில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தொழில் நகரங்கள் வழியாக இயக்கப்படும் பஸ்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டது. இதனால் சேலம் நாமக்கல் கரூர் மாவட்ட பயணியர் முன்பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.



பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் நாமக்கல் கரூர் வழியாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் நெல்லை திருச்செந்துார் நாகர்கோவில் திருவனந்தபுரம் வழித்தடத்தில் தலா 28 பஸ்கள் இரண்டு மார்க்கத்திலும் இயக்கப்படுகின்றன.



அதுபோல 17 பஸ்கள் சேலம் நாமக்கல் கரூர் வழியாக திருச்சி ராமநாதபுரம் சிவகங்கை தேனி மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன.வரும் அக். 4 சரஸ்வதி பூஜை அக். 24 தீபாவளி பண்டிகைக்கான எஸ்.இ.டி.சி. பஸ்களின் முன்பதிவு நேற்று முன்தினம் துவங்கியது. அனைத்து டிக்கெட்டுகளும் பெங்களூருவிலேயே முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.


latest tamil news



சேலம் நாமக்கல் கரூர் உள்ளிட்ட வழித்தட மாவட்டங்களுக்கு இந்த பஸ்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 'சீட்'களின் முன்பதிவும் முடிந்து விட்டது.இதனால் நேற்று ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத நிலையில் இன்று பஸ் ஸ்டாண்டுகளில் உள்ள முன்பதிவு மையங்களுக்கு சென்ற பயணியர் முன்பதிவு முடிந்து விட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.



அதே நேரத்தில் சிறப்பு பஸ்களின் இயக்கத்துக்கு அதிகாரிகள் சென்னைக்கே முக்கியத்துவம் அளித்து இந்த வழித்தடத்தில் இயங்கிய பஸ்களில் 25 சதவீதத்தை சென்னைக்கு திருப்பி விட்டுள்ளனர்.


latest tamil news



எஸ்.இ.டி.சி. பஸ்களின் முன்பதிவு முடிவுக்கு வந்து விட்டதால் சேலம் கோட்டத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CBE CTZN - Coimbatore,இந்தியா
27-செப்-202212:11:51 IST Report Abuse
CBE CTZN தமிழ்நாடு அரசு சென்னையை போலவே பெங்களூருவிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கவேண்டும். அதற்கும் முன்பதிவு செய்யும் வசதி வேண்டும். விழாக்காலத்தில் தெற்கு ரயில்வே பெங்களூருவிலிருந்து சிறப்பு ரயில்களை தமிழ்நாடு கேரளா மாநில மாவட்டங்களுக்கு இயக்க முன்வரவேண்டும் ..
Rate this:
Cancel
kijan - Chennai,இந்தியா
27-செப்-202210:57:04 IST Report Abuse
kijan பண்டிகைகளை சென்னையிலேயே கொண்டாடினால் இன்னும் சிறப்பு .... பிழைக்க மட்டும்தான் சென்னை என்ற நிலை மாறவேண்டும் ...
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
27-செப்-202210:30:10 IST Report Abuse
jayvee இது இப்படி இருக்க, தீபாவளிக்கு ஒரு நாள் முன், கழக அதாவது போக்குவரத்து கழக சங்கங்கள் போராட்டத்தில் இறங்கும் என்பதும் நடக்கக்கூடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X