மணலி மழை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்: ஒப்பந்ததாரர், அதிகாரிகள் இடையே முரண்டு!

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ஒப்பந்ததாரர், அதிகாரிகள் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, துார் வாரும் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை துார் வாரும் பணி துவக்கப்படாததால், மணலி மண்டலம் இம்முறையும் மழை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 2,071 கி.மீ., நீளமுள்ள மழை நீர் வடிகால்கள் உள்ளன. வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக, மழை நீர் வடிகால்களில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ப்பந்ததாரர், அதிகாரிகள் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, துார் வாரும் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை துார் வாரும் பணி துவக்கப்படாததால், மணலி மண்டலம் இம்முறையும் மழை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



latest tamil news




சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 2,071 கி.மீ., நீளமுள்ள மழை நீர் வடிகால்கள் உள்ளன. வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக, மழை நீர் வடிகால்களில் தேங்கியுள்ள வண்டல் மற்றும் இதர கழிவுகளை துார் வாரும் பணியை, நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே மாநகராட்சி துவங்கியது. அதன்படி, 23 நீர்நிலைகளில், 47.75 லட்சம் கிலோ கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

இதைத்தவிர, 1,356 கி.மீ., நீளமுள்ள மழை நீர் வடிகால்களை துார் வாரும் பணியை, மாநகராட்சி துவக்கியது. இதில், 972 கி.மீ., நீளமுள்ள கால்வாய்கள் துார் வாரப்பட்டுள்ளன. இதில், திருவொற்றியூரில் 83 சதவீதம், மாதவரத்தில் 24 சதவீதம், தண்டையார்பேட்டையில் 33 சதவீதம், ராயபுரத்தில் 81 சதவீதம் துார் வாரப்பட்டு உள்ளது. திரு.வி.க., நகரில் 83 சதவீதம், அம்பத்துாரில் 48 சதவீதம், அண்ணா நகரில் 66 சதவீதம், தேனாம்பேட்டையில் 82 சதவீதம், கோடம்பாக்கத்தில் 81 சதவீதம் துார் வாரப்பட்டுள்ளது.

வளசரவாக்கத்தில் 82 சதவீதம், ஆலந்துாரில் 67 சதவீதம், அடையாறில் 79 சதவீதம், பெருங்குடியில் 79 சதவீதம், சோழிங்கநல்லுாரில் 97 சதவீதம் துார் வாரும் பணிகள் முடிந்து உள்ளன.ஆனால், மணலி மண்டலத்தில் உள்ள 20 கி.மீ., நீளமுள்ள மழை நீர் வடிகால்களில், இதுவரை துார் வாரப்படவில்லை. கடந்த 2021 நவ., பெய்த கனமழையால், மணலி மண்டலத்தில் உள்ள மணலிபுதுநகர், மீஞ்சூர், சடையங்குப்பம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாகின.

அதனால், இந்தாண்டு முக்கியத்துவம் கொடுத்து துார் வாரி, முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள வேண்டிய மணலியில் கவுன்சிலர்கள், அதிகாரிகள், ஒப்பந்ததாரர் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, இதுவரை துார் வாரும் பணி நடக்கவில்லை. இவற்றை மாநகராட்சி உயரதிகாரிகளும், அப்பகுதி கவுன்சிலர்களும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
அத்துடன், இந்தாண்டு வடகிழக்கு பருவமழை அக்., ௨௦ல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மணலி மண்டலம் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


latest tamil news




மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் மழை நீர் வடிகால் பணி, மற்ற மண்டலங்களில் நடந்து வருகிறது. மணலி மண்டலத்தில் மட்டுமே, ஒப்பந்ததாரர் இதுவரை பணியை மேற்கொள்ளவில்லை. திருவொற்றியூர், மணலி, மாதவரம் ஆகிய மண்டலங்களில் உள்ள மழை நீர் வடிகால்களை துார் வார, ஒரே ஒப்பந்ததாரருக்குத் தான் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இதில், திருவொற்றியூர் மண்டலத்தில் பணிகள் ஏறத்தாழ முடிந்துள்ளன. மணலியில் பணிகள் துவங்காத நிலையில், மாதவரம் மண்டலத்திலும் குறைவான அளவில் துார் வாரப்பட்டுள்ளது. எனவே மணலியில், மண்டல நிதியின் கீழ் துார் வாரும் பணி, ஓரிரு நாளில் துவங்கும். மணலியில், 22 தெருக்களில் தான், 20 கி.மீ., நீளமுள்ள மழை நீர் வடிகால் உள்ளது. எனவே, வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக துார் வாரி முடிக்கப்படும். அதேபோல், குறைவாக துார் வாரப்பட்டுள்ள மண்டலங்களிலும், தனி கவனம் செலுத்தி துார் வாரப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.


ஆட்டம் காட்டும் ஒப்பந்ததாரர்கள்



மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை நீர் கால்வாய் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறைகள் வாயிலாக மட்டுமின்றி, நெடுஞ்சாலைத்துறையினரும் இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறை வாயிலாக முக்கிய சாலைகளில் மழை நீர் கால்வாய்கள் கட்டுமானம் மட்டுமின்றி, சிறுபாலம் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

இதற்காக, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்ப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழைக்கு இன்னும், 15 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில், பல இடங்களில் மழை நீர் கால்வாய் கட்டும் பணிகள் முடியவில்லை. பணிகளுக்கு உரிய 'பில்' தொகையை, ஒப்பந்த நிறுவனங்களுக்கு நெடுஞ்சாலைத்துறை வழங்கவில்லை என தெரிகிறது. இதனால், ஒப்பந்ததாரர்கள் பணிகளை முடிக்காமல் அரசிற்கு ஆட்டம் காட்ட துவங்கியுள்ளனர். இதனால், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
27-செப்-202210:55:09 IST Report Abuse
jayvee மழைநீர் கால்வாய்களில் தங்களது வீடு கழிவு நீரிணைப்பை மாற்றிவிடுவது, மழைநீர் வடியும் துவாரங்களில் கட்டடக்கழிவுகள், குப்பைகள் மற்றும் மக்க தாட்களை கொண்டு அடைப்பு ஏற்படுத்துவது என்று பொதுமக்கள் செய்யும் அட்டூழியத்திற்கும் குறைச்சல் இல்லை ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X