குப்பையை குவித்து நத்தப்பேட்டை ஏரி நாசம்: பசுமை தீர்ப்பாயம் விசாரிக்குமா?

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
காஞ்சிபுரம்: சுற்றுச்சூழலையும், நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டும் என, அரசு சார்பில் பேரணி, மனித சங்கிலி என பல்வேறு விழிப்புணர்வு பணிகள் செய்யப்படுகின்றன. அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதிமொழி எடுக்கின்றனர். ஆனால், அதே உள்ளாட்சி அமைப்புகள், தங்கள் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையை, நீர்நிலையில் கொட்டும் மோசமான நடவடிக்கைகளில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

காஞ்சிபுரம்: சுற்றுச்சூழலையும், நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டும் என, அரசு சார்பில் பேரணி, மனித சங்கிலி என பல்வேறு விழிப்புணர்வு பணிகள் செய்யப்படுகின்றன. அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதிமொழி எடுக்கின்றனர். ஆனால், அதே உள்ளாட்சி அமைப்புகள், தங்கள் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையை, நீர்நிலையில் கொட்டும் மோசமான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.latest tamil news
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள வார்டுகளில் அன்றாடம் சேகரமாகும் குப்பையை, தரம் பிரிக்கவும், அவற்றை முறையாக கையாள்வதற்கும், நத்தப்பேட்டை பகுதியில் அதற்கென தனி இடம் ஒதுக்கப்பட்டு, திடக் கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், நகர்ப்பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் குப்பை, இங்கு முறையாக கையாளப் படுவதும் இல்லை; தரம் பிரித்து அகற்றப்படுவதும் இல்லை.

மாறாக, அருகில் உள்ள நத்தப்பேட்டை ஏரியில் பல ஆண்டுகளாக தொடர்ந்து குப்பை கொட்டி வந்துள்ளனர். ஏரியின் 50 சதவீத பகுதி, குப்பையால் நிரம்பி காணப்படுகிறது. ஏரியினுள், குவியல் குவியலாக குப்பையை கொட்டி வைத்துள்ளனர். இதனால், ஏரியை பார்ப்பதற்கு நீர்நிலை போல் காட்சியளிக்காமல், குப்பை கொட்டும் இடம் போல் உள்ளது. இந்த இடத்தை ஏற்கனவே, மாநகராட்சியின் அதிகாரிகள், மேயர், மாவட்ட உயரதிகாரிகள் என, அனைவரும் ஆய்வு நடத்தியுள்ளனர். ஆனாலும், ஏரிக்குள் கொட்டப்பட்டிருக்கும் குப்பையை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதேபோல், காஞ்சிபுரம் மாநகராட்சியில் அன்றாடம் வெளியேறும் பாதாள சாக்கடை கழிவு நீர், நத்தப்பேட்டையில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று, கழிவு நீர் சுத்திகரித்து வெளியே விட வேண்டும். ஆனால், மாநகராட்சியின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையமும் செயல்படாமல் முடங்கிச் கிடக்கிறது. இதனால், மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்து வெளியேறும் கழிவு நீர், நேரடியாக நத்தப்பேட்டை ஏரியில் கலக்கிறது.


latest tamil news
ஒரு பக்கம் ஏரியின் 50 சதவீதம் குப்பை கொட்டி நாசம் செய்யப்பட்டுள்ளது. மற்றொரு புறம், கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல், நேரடியாக ஏரியில் கலக்கிறது. பழுதாகி இருக்கும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை சரி செய்ய, நிதி வேண்டும் என என்ற பதிலையே, மாநகராட்சி நிர்வாகம் பதிலாக கூறி வருகிறது. ஆனால், பல மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

ஏரி முழுதும் நாசமாகி வரும் நிலையில், சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டிய, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். ஏரியின் மாசு அளவை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய வேண்டும். ஏரியில் கலந்துள்ள பாக்டீரியா, ரசாயனம் போன்றவை நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவை மீறியுள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமியிடம் கேட்டபோது, “ஏரியில் குப்பை கொட்டுவதை நிறுத்த சொல்லி விட்டோம். அதிகாரிகளை கண்காணிக்க கூறியுள்ளோம். கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் இப்போதைக்கு செயல்படவில்லை. நிதி வந்தவுடன் சரி செய்கிறோம்” என்றார்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜிடம் கேட்டபோது, “காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனரிடம் இதுகுறித்து கேட்கிறோம். குப்பை கொட்ட முடியாதபடி பள்ளம் எடுக்கிறோம். இரண்டு வாரத்தில், ஏரிக்குள் கொட்டிய மொத்த குப்பையை அகற்ற மாநகராட்சி நிர்வாகத்திடம் சொல்கிறோம்” என்றார்.

இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் பிரகாஷிடம் கேட்டபோது, “ சமீபத்தில் தான் நான் பொறுப்பேற்றுள்ளேன். நத்தப்பேட்டை ஏரியில் கழிவு நீர் கலப்பது குறித்து விசாரிக்கிறேன்” என்றார்.


latest tamil news

தீர்ப்பாயம் விசாரிக்குமா?குன்றத்துாரில் மலைபோல் கொட்டிய குப்பையை அகற்ற, பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரித்த காரணத்தாலேயே அங்கிருந்த குப்பை அகற்றப்பட்டு சுத்தமானது. அதுபோல், நத்தப்பேட்டை ஏரியை குப்பை கொட்டி நாசம் செய்துள்ள மாநகராட்சி நிர்வாகம் குறித்து, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரித்தால் தான், நத்தப்பேட்டை ஏரி பாதுகாக்கப்படும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றர்.

ஏற்கனவே, நத்தப்பேட்டை மற்றும் வையாவூர் ஏரிகளை பறவைகள் சரணாலயமாக மாற்றுவதில் வனம் மற்றும் நீர்வளத்துறை இழுத்தடித்து வருவதாக, சமீபத்தில் பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஏரி முழுதும் மாநகராட்சி நிர்வாகம் நாசம் செய்து வருவதை பசுமை தீர்ப்பாயம் விசாரிக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
27-செப்-202214:35:40 IST Report Abuse
jayvee இது எதோ ஒரு சில தனி நபர்களோ அல்லது பொது ஜனமோ செய்வதுமட்டுமில்லை .. அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இணைந்து திட்டமிட்டு செய்யும் வேலை.. இவ்வாறு குப்பைகள், கட்டிட கழிவுகளை கொட்டி, நீர் நிலைகளை தரையாக மாறி, பிறகு குடிசைகளை அமைத்து பிறகு அதற்க்கு பாட்பட்டா ட கொடுத்து ..பிறகு அதை பெரிய பெரிய பில்டர்ஸ்க்கு விற்று ..இப்படி பல பல விஷயங்கள் உள்ளது.. கழகங்கள் இருக்கும் வரை தமிழ்நாடு உருப்புடாது
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
27-செப்-202212:55:31 IST Report Abuse
Ramesh Sargam நத்தப்பேட்டை ஏரியில் மட்டுமா குப்பை கொட்டி நாசம் செய்கிறார்கள்? தமிழகம் முழுவதும் உள்ள பல நீர்நிலைகளில், அட சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரியில் கூட குப்பைகளை கொட்டி நாசம் செய்கிறார்கள் மக்கள். முதலில் மக்கள் திருந்த வேண்டும். அவர்களை அரசு நிறுத்தவேண்டும். ஆனால் அரசை யார் திருத்துவது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X