அரசு நிர்வாகத்தில் நடப்பது எதுவும் முதல்வருக்கு தெரியாதுன்னு, பன்னீர்செல்வம் நினைக்கிறாரா?

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: முதியோர் உதவித்தொகை பெற்று வந்த பயனாளிகளில், 1 லட்சத்து 82 ஆயிரம் பேர் ஓய்வூதியத்தை, தி.மு.க., அரசு ரத்து செய்திருப்பது, வருவாய் இல்லாத முதியோரை கடும் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் உடனே தலையிட்டு, தற்போது உதவித்தொகை பெறும் அனைத்து பயனாளிகளுக்கும், அது தொடர வழிவகை செய்ய வேண்டும்.மின் கட்டண உயர்வு
பன்னீர்செல்வம், சசிகலா


முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை:

முதியோர் உதவித்தொகை பெற்று வந்த பயனாளிகளில், 1 லட்சத்து 82 ஆயிரம் பேர் ஓய்வூதியத்தை, தி.மு.க., அரசு ரத்து செய்திருப்பது, வருவாய் இல்லாத முதியோரை கடும் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் உடனே தலையிட்டு, தற்போது உதவித்தொகை பெறும் அனைத்து பயனாளிகளுக்கும், அது தொடர வழிவகை செய்ய வேண்டும்.

மின் கட்டண உயர்வு முதல் உதவித்தொகை ரத்து வரை, அரசு நிர்வாகத்தில் நடப்பது எதுவும் முதல்வருக்கு தெரியாதுன்னு, பன்னீர்செல்வம் நினைக்கிறாரா?




தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:

தி.மு.க., செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், பி.எப்.ஐ., இயக்கம் மீதான சோதனைகள்குறித்து பேசும் போது, 'தேசிய புலனாய்வு முகமை சட்டத்தை எதிர்ப்பதாகவும்,அந்த சட்டம் தவறானது' என்றும் கூறியுள்ளார். 2019ல், இந்த சட்டத்திற்கு ஆதரவாக, பார்லிமென்டின் இரு சபைகளிலும், தி.மு.க., ஓட்டளித்தது. அப்போது, இவரும் எம்.பி.,யாக இருந்து ஓட்டளித்தார். அதை மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு பேசுவது வெட்கக்கேடானது.

'தமிழகத்தில் எட்டு வழிச்சாலை வேண்டாம்' என்றவங்க, இப்ப வேணும்னு சொல்றதை ஏத்துக்கிறீங்கல்ல... இதையும் ஏத்துக்கிட்டு தான் ஆகணும்!




மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிக்கை:

ஜெயலலிதா இல்லாததால், தி.மு.க.,வினரை மக்கள் பிரதிநிதிகளாக, மக்கள் அமர வைத்துள்ளனர். ஆனால், தி.மு.க.,வினரோ தமிழகத்தை அவர்களுக்கே பட்டயம் எழுதிக் கொடுத்ததுபோல நினைத்து செயல்படுவது, மிகவும் கண்டனத்துக்கு உரியது.தி.மு.க.,வினர் செய்கிற மக்கள் விரோத செயல்களை, ஆட்சியாளர்கள் தடுக்கவில்லை என்றால், அது தமிழகத்தையும், தமிழக மக்களையும், கடுமையாக பாதிக்கும். இதை ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.


latest tamil news



'நீங்க கூட 'அட்வைஸ்' பண்ற அளவுக்கு, தி.மு.க., அரசின் செயல்பாடுகள் போயிடுச்சு பாருங்க!




ஹிந்து மக்கள் கட்சி தலைவர்அர்ஜுன் சம்பத் பேட்டி:

தமிழகத்தில், குறிப்பாக, கோவையில் பா.ஜ., அலுவலகம் உட்பட பல இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதன் வாயிலாக மதக்கலவரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. மத்திய அரசு, தமிழகமுதல்வரை அழைத்து இதுகுறித்து விளக்கம் கேட்க வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலையிட்டு, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

தேசவிரோத சக்திகளை மத்திய அரசு வேடிக்கை பார்க்காது... வினை விதைத்தவர்கள், வினையை அறுவடை செய்தே ஆகணும்!


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
27-செப்-202215:00:05 IST Report Abuse
sankar சந்திரலேகா முகத்தில் ஆஸிட் அடிச்சது அம்மாஜிக்கு ரொம்ப நாள் தெரியாம போச்சாம்.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
27-செப்-202211:00:20 IST Report Abuse
jayvee பன்னீர்செலவத்திற்கு அதிமுகவின் நடந்ததே தெரியாது.. TKS இளங்கோவன் திமுகவின் KS அழகிரி என்று சொல்லலாம்.. அவ்வளவு முரண்பாடான பேச்சுகள் ..
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
27-செப்-202210:13:20 IST Report Abuse
sankar அம்மாஜிக்கு ரொம்ப நாள் தெரியாம போச்சாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X