சென்னை: தமிழக, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் தேவராஜ், சென்னையில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை ஓட்டேரியில் குடும்பத்துடன் வசித்து வந்த தேவராஜ், கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (செப்., 26) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் தேவராஜ் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.