‛‛திராவிடம் - சமஸ்கிருதம், மாடல் -இங்கிலீஷ்''; பிறகு எப்படி தமிழ் வளரும்: வறுத்தெடுக்கிறார் சீமான்

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (55) | |
Advertisement
சென்னை: திராவிடம் என்பது சமஸ்கிருத வார்த்தை. மாடல் என்பது ஆங்கில வார்த்தை. பிறகு தமிழ் எப்படி வளரும் என நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: தி.மு.க.,வை தெரிந்து தான் தேர்வு செய்துள்ளோம். மதிப்புமிக்க அமைச்சர் கல்வியாளர், ஓசியில் போகிறீர்கள் என மக்களை பார்த்து சொல்கிறார். இவர்கள் தான் சுயமரியாதை, தன்மானம்
Seeman,சீமான்,  தமிழ், திராவிட மாடல், சமஸ்கிருதம், ஆங்கிலம், இங்கிலீஷ், பொன்முடி,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: திராவிடம் என்பது சமஸ்கிருத வார்த்தை. மாடல் என்பது ஆங்கில வார்த்தை. பிறகு தமிழ் எப்படி வளரும் என நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: தி.மு.க.,வை தெரிந்து தான் தேர்வு செய்துள்ளோம். மதிப்புமிக்க அமைச்சர் கல்வியாளர், ஓசியில் போகிறீர்கள் என மக்களை பார்த்து சொல்கிறார். இவர்கள் தான் சுயமரியாதை, தன்மானம் குறித்து பேசினர். தற்போது, மக்களை ஓசியில் பயணிக்கிறீர்கள் என்கிறார்.ஒரு பெண்ணை அழைத்து தாழ்த்தப்பட்டவரா என கேட்கிறார். அவர், தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நின்று கவுன்சிலராக தேர்வாகி உள்ளார். இவர்களால் அல்ல. முன்பு, தாழ்த்தப்பட்டவர்கள் தெருவிலும், கோவில் தெருவிலும் நடமாட முடியாது. இன்று அந்த உரிமை வந்ததற்கு ஈ.வெ.ராமசாமி போட்ட பிச்சை தான் காரணம் என்கிறார். நாங்கள் பிச்சைக்காரர்களா?நீங்கள் இருகும் இந்த உயரமெல்லாம் நாங்கள் போட்ட பிச்சை. எனது தாய், தந்தை, அண்ணன், தம்பி, மாமன் எல்லாம் போட்ட ஓட்டு பிச்சை. இதை மறந்து ஆணவ திமிரில் பேசுவது நீண்ட நாள் நீடிக்காது. சும்மா ஆடிக்கொண்டிருக்காமல், வார்த்தைகளை அளந்து தன்மையோடு பேச பழகுங்கள்.ஓசியில் பயணிக்கிறீர்கள் என பொன்முடி பேசுவார் என எதிர்பார்க்கவில்லை. அவர் படித்தவர், பண்பாளர். ஓசியில் போகிறீர்கள் என்கிறார். நீங்கள் சொந்த காசு போட்டு வாங்கிய பஸ்சிலா பயணிக்கிறோம்?. எங்கள் வரியில் வாங்கவில்லையா?latest tamil news


இதெல்லாம் கொடுமை. அதிகாரத்திற்கு வந்துவிட்டோம் என பேசுகின்றனர். இதெல்லாம் திராவிட மாடலில் வருகிறது. தமிழ் நமக்கு உயிர். தமிழ் வளர்ச்சிக்கு பரப்புரை. அரசு பள்ளிகளில் தமிழ் படிக்க வழியில்லை.அரசு கோப்புகளில் தமிழ் இல்லை. வணிக நிறுவனங்களின் பெயர்களில் தமிழ் இல்லை. தெருவே கிடையாது. 'ஸ்ட்ரீட்' தான் உள்ளது. நிலச்சாலை கிடையாது. அவென்யூ உள்ளது. குடியிருப்புகள் கிடையாது. 'பிளாட்ஸ்' தான் உள்ளது. இந்த நிலையில் தமிழ் பரப்புரை நடக்கிறது.ஆனால் பெயர் ‛‛திராவிட மாடல்''. திராவிடம் சமஸ்கிருதம். மாடல் ஆங்கிலம். எப்படி தமிழ் வளர்கிறது. கேவலம். இதெல்லாம் தான் திராவிட மாடல். திராவிடம் தான் தமிழ் சொல்லா? இல்லை. மாடல் தமிழ் சொல்லா? தமிழை எப்படி வளர்க்கிறீர்கள்.மேடைக்கு மேடை திராவிட மாடல் என முழங்குகிறீர்கள். கொஞ்ச நாட்களில் சட்டையை கிழித்து கொண்டு திராவிட மாடல் திராவிட மாடல் என கூறிக்கொண்டு சுற்றப் போகிறீர்கள். இவ்வாறு சீமான் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-செப்-202207:20:44 IST Report Abuse
அப்புசாமி இந்தில இந்த பிரச்சனையே இல்கை. எல்கா மொழி வார்த்தைகளையும் இந்தி லிபியில் எழுதி படிச்சுடுவாங்க. கடைசியில் சோறு போடுற மாடல்தான் ஜெயிக்கும்.
Rate this:
Cancel
28-செப்-202207:18:19 IST Report Abuse
அப்புசாமி சீமான் தமிழ்பெயரா வடமொழியா? சீமா என்பது வடமொழியில் எல்லை என்று பொருள் படும். சீமை என்றால் எல்லைக்கு அப்பால் உள்ள நிலப்பகுதி. அப்போ சீமான் என்றால் ஒரு வகையான வந்தேறி ந்னு வெச்சுக்கலாமா? திருநெல்வேலி சீமை பேர் எப்படி வந்தது? சிங்கப்பூர் சீமான் என்றால் யார்?
Rate this:
Cancel
Madhu - Trichy,இந்தியா
27-செப்-202222:09:17 IST Report Abuse
 Madhu 'ஜெகத்ரட்சகன்' எனும் பெயர் கொண்ட தி.மு.க. பிரமுகர் ஒருவர் இருக்கிறார். 'ஜெகத்ரட்சகன்' என்பது தமிழா? சிறப்புத் தமிழா? அல்லது செம்மொழித் தமிழா? தமிழர்களாகிய நாம் நம்மையறியாமலேயே இதுபோல‌ பல சம்ஸ்கிருத வார்த்தைகளை உபயோகிக்கிறோம் ஆனால், சம்ஸ்கிருதம் வேண்டாம் என்று சொல்வதோடு அல்லாமல் அது ஒரு 'செத்த பாஷை' என்கிறோம். மொழிக்கு ஒலி உண்டு. ஆதி வாசிகள், பழங்குடியினர் இன்னமும் உள்ளனர். அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் மொழி நாம் அறியாதது அவற்றிற்கு வரி (எழுத்து) வடிவம் கிடையாது. அவர்கள் பேசுவதை செத்த பாஷை எனச் சொல்ல இயலாது. அதே போல இன்று சம்ஸ்கிருதத்தில் பேசுபவர்கள் மிகக் குறைவாக இங்கு இருக்கலாம். ஆனால் அந்த மொழிக்கு ஒலி வடிவமும், வரி வடிவமும் உண்டு. இன்னமும் சொல்லப்போனால், வட இந்தியாவிலும், கேரளாவிலும் சம்ஸ்கிருதத்தில் பேசுபவர்கள் உள்ளனர். தமிழ் நாட்டில் கூட பிராமணர்கள் சம்ஸ்கிருதம் பேசுவதில்லையே தவிர அவர்கள் வீட்டிலும், கோவில்களிலும் வழிபடும்போது ஸ்லோகங்கள், பாடல்களிலும், சந்தியாவந்தனங்கள் மூலமாகவும் , வீட்டில் அமாவாசை, முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் சமயங்களிலும் சம்ஸ்கிருதத்தைத்தான் உபயோகிக்கிறார்கள். நிறையப் பேருக்கு சரளமாகப் படிக்கத் தெரியும் எனவே, சம்ஸ்கிருதத்தை 'செத்த பாஷை' என்று புறந்தள்ளி விட முடியாது. சமீப காலமாக ' பொன்னியின் செல்வன்' குறித்து பல்வேறு செய்திகள் அவ்வப்போது ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. நிறைய ஊடகவியலாளர்கள் 'பழுவேட்டரையர்' எனும் பெயரை உச்சரிப்பதற்கே திணறுவதைக் காண முடிந்தது. ஒருவர் 'பலுவேட்ரையர்' என்கிறார் வேறொருவர் 'பளுவேட்ராயர்' என்கிறார். சிரிப்புத்தான் வருகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X