கடன் வாங்கி வரிகளை குறைக்க பிரதமர் முயற்சி: பவுண்ட் வீழ்ச்சி!

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
பிரிட்டனில் விலைவாசி உயர்வு ஏற்கனவே 10 சதவீதம் அளவு இருக்கும் நிலையில் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ் மிகப்பெரிய வரிக் குறைப்பு நடவடிக்கையையும், அதற்காக அதிக கடன் வாங்கும் திட்டத்தையும் முன் மொழிந்துள்ளார். இதனால் டாலருக்கு நிகரான பிரிட்டன் கரன்சியான பவுண்டின் மதிப்பு 1985க்கு நிலைக்கு வந்துள்ளது. அதாவது 1 பவுண்டுக்கு 1.2 டாலர் கிடைத்தது போய், இப்போது 1 பவுண்டுக்கு
Lis Truss, Dollar, British Pound, டாலர், பிரிட்டன் பவுண்ட், ஜப்பான் யென், பிரிட்டன் பொருளாதாரம், லிஸ் ட்ரஸ் , Japanese Yen, Britain Economy, Pound, Britain, USD, dollar,

பிரிட்டனில் விலைவாசி உயர்வு ஏற்கனவே 10 சதவீதம் அளவு இருக்கும் நிலையில் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ் மிகப்பெரிய வரிக் குறைப்பு நடவடிக்கையையும், அதற்காக அதிக கடன் வாங்கும் திட்டத்தையும் முன் மொழிந்துள்ளார். இதனால் டாலருக்கு நிகரான பிரிட்டன் கரன்சியான பவுண்டின் மதிப்பு 1985க்கு நிலைக்கு வந்துள்ளது. அதாவது 1 பவுண்டுக்கு 1.2 டாலர் கிடைத்தது போய், இப்போது 1 பவுண்டுக்கு கிட்டத்தட்ட 1 டாலர் மட்டுமே கிடைக்கும் நிலைக்கு இறங்கியுள்ளது.

ஒரு பிரிட்டன் பவுண்டின் மதிப்பு 2021 மத்தியில் 1.4 அமெரிக்க டாலராக இருந்தது. 2008ல் 2 அமெரிக்க டாலர் அளவிற்கும் உயர்ந்துள்ளது. ஆனால் தற்போது பவுண்ட் மற்றும் டாலர் மதிப்பு இணையாக வந்திருக்கிறது. கடைசியாக 1985 பிப்ரவரியில் இவ்வாறு நிகழ்ந்தது. எரிசக்தி விலை அதிகரிப்பு பிரிட்டனின் வர்த்தக பற்றாக்குறையை விரிவுப்படுத்தியுள்ளது. மேலும் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துவதால், முதலீட்டாளர்கள் நிதிகளை அங்கு திருப்பி விடுகின்றனர். இதனால் டாலர் நிலையான உயர்வில் இருக்கிறது. இது கடந்த வாரத்திற்கு முன்பே பவுண்ட் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியது.

புதிய பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸின் வளர்ச்சித் திட்டங்கள், மேலும் விலைவாசியை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சத்தை முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. வரிகளை பெருமளவு குறைக்கவும், அதற்காக கடன் வாங்குவதை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இது பணப்புழக்கத்தை அதிகரித்து விலைவாசியை மேலும் கூட்டும் என அஞ்சுகின்றனர். ஏற்கனவே 10 சதவீத விலைவாசி உயர்வு காணப்படுகிறது. சில பொருளாதார நிபுணர்கள் இந்த திட்டத்தை அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனின் 1980 காலத்து அணுகுமுறையுடன் ஒப்பிடுகின்றனர். அப்போது அவர் அமெரிக்க பொருளாதாரத்துக்கு உத்வேகம் அளிக்கச் செய்ய வரிகளை பெருமளவு குறைத்தார், வட்டியை உயர்த்தினார், நலத்திட்டங்களுக்கான அரசு செலவுகளை குறைத்தார்.


பவுண்ட் மதிப்பு குறைந்தால் என்ன ஆகும்!latest tamil news


பவுண்ட் மதிப்பு குறைவது லண்டன் வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி. ஆனால் பிரிட்டன் குடும்பங்களுக்கு சுமையாகும். ஏற்கனவே எரிசக்தி விலைகள் அங்கு அதிகமுள்ளன. எரிபொருள், வாகனங்கள் மற்றும் உணவு உள்ளிட்ட இறக்குமதி பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அவர்கள் கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும். இது வர்த்தகப் பற்றாக்குறையை மேலும் பெரிதாக்கும். டாலர் வலுப்பெறுவதால் ஜப்பானும் இந்த பிரச்னையை சந்திக்கிறது. அந்நாட்டின் பணமான யென் டாலருக்கு எதிராக கடுமையாக சரிந்துள்ளது. இதனால் 1998க்கு பின் ஜப்பான் அரசு அந்நியச் செலாவணி சந்தையில் நுழைந்து யென் மதிப்பை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு சென்றது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
27-செப்-202220:20:09 IST Report Abuse
Ramesh Sargam பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் சென்னைக்கு வந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் கொஞ்சம் காலம் பொருளாதாரம் பற்றி பாடம் கற்றுக்கொள்ளவேண்டும், பிரிட்டன் பிரச்சினைகளுக்கு முடிவுக்கான. (அவ்வளவுதான், லீஸுக்கு இப்பொழுது தெரிந்த பொருளாதாரம் முற்றிலும் மறந்து போய்விடும்...)
Rate this:
Cancel
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
27-செப்-202220:00:38 IST Report Abuse
Kalyan Singapore வரியைக்குறைக்க மாட்டேன் என்று கூறியதற்காக ரிஷி சுநக்கை தேர்வு செய்யாத பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த வரிக்குறைப்பை செய்து நாணயத்தின் மதிப்பையும் குறைத்து விட்டனர் விரைவில் அடுத்த தேர்தல் வரும்போது பாராளுமன்ற தங்கள் கட்சி ஜெயிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் குறைப்பது உறுதி. தவறான தலைமையை ( நம்மவர் என்ற காரணத்துக்காக மட்டும் ) தேர்ந்தெடுத்தால் இலங்கையின் நிலைமை எல்லா நாடுகளுக்கும் வரும்.
Rate this:
Cancel
Fastrack - Redmond,இந்தியா
27-செப்-202216:50:18 IST Report Abuse
Fastrack 90 பில்லியன் டாலர் சந்தையில் இறக்கி இந்தியா சமாளித்தது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X