ஓடும் பஸ்சில் தொங்கியபடி செருப்பு காலால் 'ஸ்கேட்டிங்': பள்ளி மாணவன் அதிரடி கைது

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (23) | |
Advertisement
சென்னை: சென்னையில் ஓடும் பஸ்சில் தொங்கியபடி செருப்பு காலால் 'ஸ்கேட்டிங்' செய்து சாகசம் செய்த பள்ளி மாணவன் கைது செய்யப்பட்டான்.பள்ளி செல்லும் மாணவர்கள் சிலர் பஸ்சில் தொங்கியபடி பலர் அட்டகாசம் செய்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதை தட்டிக்கேட்கும் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுடன் வாக்குவாதத்தில் மாணவர்கள் ஈடுபடுகின்றனர். சிலர், பஸ் படிக்கட்டில் தொங்கி
Bus, Student, Skating, Arrest, பஸ், பள்ளி மாணவன், ஸ்கேட்டிங், கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: சென்னையில் ஓடும் பஸ்சில் தொங்கியபடி செருப்பு காலால் 'ஸ்கேட்டிங்' செய்து சாகசம் செய்த பள்ளி மாணவன் கைது செய்யப்பட்டான்.



பள்ளி செல்லும் மாணவர்கள் சிலர் பஸ்சில் தொங்கியபடி பலர் அட்டகாசம் செய்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதை தட்டிக்கேட்கும் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுடன் வாக்குவாதத்தில் மாணவர்கள் ஈடுபடுகின்றனர். சிலர், பஸ் படிக்கட்டில் தொங்கி தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடையும் செய்திகளும், காட்சிகளும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. ஆனாலும், மாணவர்களிடம் இந்த 'சேட்டைகள்' குறைந்தபாடில்லை.



latest tamil news


கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னை தி.நகரில் இருந்து செம்மஞ்சேரி வரை செல்லும் பஸ்சில் பள்ளி சீருடையில் அரசு பள்ளி மாணவன் ஒருவன் ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்கிக் கொண்டே செருப்பு காலுடன் தரையில் தேய்த்து ஸ்கேட்டிங் செய்வது போல சாகசம் செய்தார்.



இந்த வீடியோ காட்சிகள் வைரலாகின. அந்த மாணவன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து பஸ்சில் தொங்கியபடி ஆபத்தான முறையில் சாகசம் செய்த 11ம் வகுப்பு மாணவனை போலீசார் இன்று (செப்.,27) கைது செய்தனர். மாணவன், அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
27-செப்-202220:14:59 IST Report Abuse
அசோக்ராஜ் கருவறை முதல் கல்லறை வரை இலவசம். அது பாடமா படிக்கும்? இப்படித்தான் இசுக்கும். அது சரி. அந்த செருப்பு இலவசம் தானே பொன்முடி சார்?
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
27-செப்-202219:59:43 IST Report Abuse
ponssasi இந்த மாணவருக்கு சில சாதி சங்க தலைவர்கள் குரல் கொடுப்பார்கள். எப்படியும் இடஒதுக்கீட்டில் கல்லூரியில் இடமும் அரசு வேலையும் கிடைத்துவிடும். இதற்க்கு ஏன் படிக்கவேண்டும். படித்து நல்ல மதிப்பெண் எடுத்தால் தான் கல்லூரி மற்றும் வேலை என்று சொல்லிப்பாருங்கள் இந்த புத்தி வராது.
Rate this:
Cancel
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
27-செப்-202218:50:51 IST Report Abuse
முதல் தமிழன் Ivanellam ethukkum payanillai. Better to die.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X