'நான் ஒருவன்தான் கட்சிக்காரர்களை மணல் அள்ள சொன்னேன்': திமுக எம்.பி.,யின் வாக்குமூலம் வைரல்

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (23) | |
Advertisement
நாமக்கல்: 'நான் ஒருவன் தான் கட்சிக்காரர்களை கூப்பிட்டு மணல் அள்ள சொல்கிறேன்' என திமுக எம்.பி., ராஜேஷ்குமார் பேசிய வீடியோ வைரலாகியுள்ளன.தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது கரூர் தொகுதி திமுக வேட்பாளரான செந்தில் பாலாஜி, 'திமுக ஆட்சிக்கு வந்து, முதல்வராக ஸ்டாலின் கையெழுத்துப் போட்ட அடுத்த நொடியே, மாட்டு வண்டி உரிமையாளர்கள், ஆற்றுக்குள் இறங்கி மணல் அள்ளலாம். அதை
Namakkal, DMK_MP, Rajeshkumar, Sand, நாமக்கல், திமுக, எம்பி, ராஜேஷ்குமார், மணல், வீடியோ, வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நாமக்கல்: 'நான் ஒருவன் தான் கட்சிக்காரர்களை கூப்பிட்டு மணல் அள்ள சொல்கிறேன்' என திமுக எம்.பி., ராஜேஷ்குமார் பேசிய வீடியோ வைரலாகியுள்ளன.தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது கரூர் தொகுதி திமுக வேட்பாளரான செந்தில் பாலாஜி, 'திமுக ஆட்சிக்கு வந்து, முதல்வராக ஸ்டாலின் கையெழுத்துப் போட்ட அடுத்த நொடியே, மாட்டு வண்டி உரிமையாளர்கள், ஆற்றுக்குள் இறங்கி மணல் அள்ளலாம். அதை யாரும் தடுக்க முடியாது. அப்படியே தடுக்கும் அதிகாரிகள் இங்கே பதவியில் இருக்க முடியாது' எனப் பேசியது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பிறகு திமுக தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியில் அமர்ந்தது. தற்போதும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆற்றில் மணல் அள்ளுவது தொடர்வதாக கூறப்படுகிறது.latest tamil newsஇந்த நிலையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராகவும் ராஜ்யசபா எம்.பி.,யுமான ராஜேஷ்குமார் தற்போது மணல் அள்ளுவது குறித்து பேசியது சர்ச்சையாகி உள்ளது. வீடியோவில் திமுக எம்.பி.,யான ராஜேஷ்குமார், மணல் அள்ளும்போது கட்சியினருக்குள் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக சமரசம் பேசுகிறார்.அதில், 'எந்த மாவட்ட செயலாளரும் கட்சிக்காரர்களையும் கூப்பிட்டு மணல் அள்ளுங்கள் என்று சொல்வதே கிடையாது. நான் ஒருவன் தான் சொல்கிறேன். மற்ற அனைத்து மாவட்ட செயலர்களும் கம்பெனிக்கு மணல் அள்ள அனுமதி கொடுத்துவிட்டு பணம் வாங்கி கொள்கின்றனர்' எனப் பேசுகிறார். அவருக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட இந்த வீடியோ, இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Bangalore,இந்தியா
27-செப்-202222:00:28 IST Report Abuse
raja நல்ல மனுஷன்யான்னு கொத்தடிமைகள் கூவ, தமிழ்நாடே காரித்துப்ப.. விடிஞ்சது போ.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
27-செப்-202221:07:18 IST Report Abuse
Ramesh Sargam 'நான் ஒருவன் தான் கட்சிக்காரர்களை கூப்பிட்டு மணல் அள்ள சொல்கிறேன்' என திமுக எம்.பி., ராஜேஷ்குமார் பேசிய வீடியோ வைரலாகியுள்ளன. இதைவிட பெரிய ஆதாரம் எண்ணவேண்டும் நீதிமன்றத்துக்கு இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க...? போதாதற்கு "அதை யாரும் தடுக்க முடியாது." என்றும் தெனாவட்டாக, மற்றவர்களை பயமுறுத்தும் படி பேசி இருக்கிறார். ஆகையால், கணம் நீதிபதி அவர்களே உடனே இவர் மீது நடவடிக்கை எடுக்கவும்.
Rate this:
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
28-செப்-202210:29:16 IST Report Abuse
MARUTHU PANDIARஅதெல்லாம் இங்க நடக்காதுங்கோ. அது போலி வீடியோ, மார்பிங் செஞ்சதுன்னு அழிச்சாட்டியம் பண்ணுவாங்கோ. அத விட ரொம்ப முக்கியம்இது தலைமை ""கவனத்துக்கே"" வராதுங்கோ, அப்புறம் எப்படிங்கோ நடவடிக்கை, வடிக்கை இப்படி கனாவெல்லாம் கண்டுக்கினு தொண்ட தண்ணிய வேஸ்ட் பண்ணாதீங்கோவ்-அம்புட்டு தேன்...
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
27-செப்-202220:27:34 IST Report Abuse
வாய்மையே வெல்லும் தமிழ், தமிழன் என்கிற அநேக டுபாக்கூர் பெயரில் உலாவரும் தீய மூர்க்க சக்திகள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். இது நாட்டாமையின் தீர்ப்பு..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X