ஒரே நாளில் பொறுப்பு; அதே நாளில் நீக்கம்: பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு வந்த சோதனை

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
சென்னை: அதிமுக.,வில் எம்.ஜி.ஆர்., காலத்து மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு இப்படி ஒரு சோதனை வரக்கூடாது. இன்று, அவருக்கு ஒரு பதவி தேடி வந்தது. ஆனால், இன்னொரு புறம், அதிமுக.,வை விட்டு நீக்கப்பட்டதாக தகவலும் வந்தது.அதிமுக.,வில் பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்திற்கும் இடையே, பிளவு ஏற்பட்ட பிறகு, பழனிசாமிக்கு எதிராக பண்ருட்டி ராமச்சந்திரன், பேசியும் பேட்டியும்
admk, eps, ops, panruti ramachandran,அதிமுக, பண்ருட்டி ராமச்சந்திரன்,  பழனிசாமி, பன்னீர்செல்வம், இபிஎஸ், ஓபிஎஸ்ல எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி, பொது செயலாளர், ஒருங்கிணைப்பாளர்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: அதிமுக.,வில் எம்.ஜி.ஆர்., காலத்து மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு இப்படி ஒரு சோதனை வரக்கூடாது. இன்று, அவருக்கு ஒரு பதவி தேடி வந்தது. ஆனால், இன்னொரு புறம், அதிமுக.,வை விட்டு நீக்கப்பட்டதாக தகவலும் வந்தது.



அதிமுக.,வில் பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்திற்கும் இடையே, பிளவு ஏற்பட்ட பிறகு, பழனிசாமிக்கு எதிராக பண்ருட்டி ராமச்சந்திரன், பேசியும் பேட்டியும் கொடுத்து வந்தார். இவருக்கு பிடித்த தலைவர் பன்னீர்செல்வம் போலிருக்கிறது. கட்சியில் பெரும்பாலானோர் பழனிசாமி பக்கம் சாய, இவர் என்ன நினைத்தாரோ, பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பேசிக்கொண்டிருந்தார்.


இதனால் பூரித்து போன பன்னீர்செல்வம், பண்ருட்டிக்கு அரசியல் ஆலோசகர் என்ற பதவியை கொடுத்து அழகு பார்த்தார்.


இது தெரிந்து ஏற்கனவே கடுப்பாக இருந்த பழனிசாமி, பண்ருட்டியை அ.தி.மு.க.,வில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.



latest tamil news


பண்ருட்டி அதிமுக.,வின் ஆலோசகராக இருக்கிறார். ஆனால், அவர் அதிமுக.,வில் இல்லை. இது எப்படி இருக்கு... என்று சில ரத்தத்தின் ரத்தங்கள் கமென்ட் அடித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
28-செப்-202215:03:55 IST Report Abuse
 N.Purushothaman பண்ருட்டியாருக்கு எல்லாம் மவுசு போயி பல காலம் ஆகிடுச்சு ...பேரன் பேத்திகளுடன் நாட்களை கழிப்பது தான் சிறந்தது ...
Rate this:
Cancel
Muraleedharan.M - Chennai,இந்தியா
28-செப்-202207:08:58 IST Report Abuse
Muraleedharan.M MGR போல் MGR SIGNஐ காசோலையில் போட யாருக்கு தில் இருக்கு. பண்ருட்டியாருக்கு இருக்கு.
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
27-செப்-202222:41:52 IST Report Abuse
Sivagiri தலைவர்கள் எப்போதும் தலைவர்கள்தான் ... , தொண்டர்கள் தலைவர் ஆவது உண்டு , ஆனால் ப்ரோக்கர்கள் எப்போதும் ப்ரோக்கர்கள்தான் ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X