விலைவாசி வளர்ச்சி 7% ஆக இருப்பது கவலை: தலைமைப் பொருளாதார ஆலோசகர்

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
“நாட்டில் பணவீக்கம் 7 சதவீதமாக இருப்பது கவலையளிக்கிறது, அதனை சமாளிக்கும் தன்மை நாட்டிற்கு குறைவாகவே உள்ளது” என்று மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.சுவதேசி ஆராய்ச்சி நிறுவனத்தின் மெய்நிகர் கருத்தரங்கில் பங்கேற்று அவர் பேசியது: இந்தியப் பொருளாதாரம் வேகமாக மீண்டு வருகிறது. தனியார் டிமாண்ட் மற்றும் சேவைத் துறை எதிர்பார்த்ததை
Inflation, ChiefEconomicAdvisor, விலைவாசி, பொருளாதாராஆலோசகர், பொருளாதாரம், Economic, AgriSector, ManufacturingSector

“நாட்டில் பணவீக்கம் 7 சதவீதமாக இருப்பது கவலையளிக்கிறது, அதனை சமாளிக்கும் தன்மை நாட்டிற்கு குறைவாகவே உள்ளது” என்று மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.

சுவதேசி ஆராய்ச்சி நிறுவனத்தின் மெய்நிகர் கருத்தரங்கில் பங்கேற்று அவர் பேசியது: இந்தியப் பொருளாதாரம் வேகமாக மீண்டு வருகிறது. தனியார் டிமாண்ட் மற்றும் சேவைத் துறை எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்படுகிறது. அந்நிய நேரடி முதலீடு சீராக இருக்கும் போது தனியார் முதலீட்டு உருவாக்கம் நடைபெறுகிறது. இருப்பினும், சவால்கள் உள்ளன. புவிசார் அரசியல் குழப்பமாக உள்ளது, இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக உள்ளனர். பொருளாதாரத்தின் விவசாயம், உற்பத்தி, கட்டுமானம் உட்பட அனைத்து துறைகளும் நன்றாக செயல்படுகின்றன.


latest tamil news


அதே சமயம் இந்தியா சிறந்த மூலதனங்களை கொண்ட வங்கித் துறையை கொண்டுள்ளது. 2008ம் ஆண்டு நிதி நெருக்கடியினால் அதிக வாராக் கடன்களை கொண்டிருந்த இந்திய வங்கித் துறையை, திவால் மற்றும் கடன் மோசடி சட்டங்கள் ஆரோக்கியமான நிலைமைக்கு கொண்டு வர முக்கிய பங்காற்றியது. இந்தியப் பொருளாதாரம் நல்ல கடன்களுக்கு நல்ல மூலதன உருவாக்கத்தை காண உள்ளது. இந்தியாவில் பணவீக்கம் இப்போது 7 சதவீதமாக உள்ளது. இந்த விகிதம் கவலையளிக்கிறது. இதனை ஏற்றுக்கொள்ளும் அளவு நாடு இல்லை. இவ்வாறு கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-செப்-202212:31:42 IST Report Abuse
அப்புசாமி இப்புடிப்.பேசுனா, ரகுராம் ராஜன் மாதிரி ஆயிடுவீங்க. தூக்கிடுவாங்க. நம்ம சக்தி தாஸ் மாதிரி இருக்கணும்.
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
28-செப்-202208:22:54 IST Report Abuse
venugopal s பணவீக்கம் நாட்டு மக்களுக்கு நல்ல செய்தி அல்ல.
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
27-செப்-202222:15:05 IST Report Abuse
Siva இந்திய தேசத்தை பல்வேறு இம்சை மத்தியிலும் ஸ்திரமான நிலையில் வைத்து உள்ளார் பிரதமர் மோடி ஜி என்று நேரடியாக சொல்ல என்ன தயக்கம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X