உங்கள் மேலதிகாரியால் அனுதினமும் அவதியுறுபவரா நீங்கள்? இது உங்களுக்குத்தான்..!

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
நாம் பணிசெய்யும் அலுவலகத்தில் ஒருவர் சக ஊழியர்களிடம் ஆளுமையுடன் நடந்துகொண்டு வேலை வாங்கும் குணத்தை 'பாஸ் மெண்டாலிட்டி' என்பர். சில சமயங்களில் நம்முடன் பணி செய்யும் சக பணியாளர்கூட இவ்வாறு பாஸ் மென்டாலிட்டியுடன் நடந்துகொள்வார். இதுபோன்ற அணுகுமுறை முதலாளிகளிடம் மட்டுமே இருக்கும் என சிலர் தவறாக நினைப்பர். ஆனால் இது யாருக்கு வேண்டுமானாலும் இருக்க வாய்ப்புள்ளது.
பாஸ் மெண்டாலிட்டி, மேலாளர் குணாதிசயம், boss mentality, workers struggles

நாம் பணிசெய்யும் அலுவலகத்தில் ஒருவர் சக ஊழியர்களிடம் ஆளுமையுடன் நடந்துகொண்டு வேலை வாங்கும் குணத்தை 'பாஸ் மெண்டாலிட்டி' என்பர். சில சமயங்களில் நம்முடன் பணி செய்யும் சக பணியாளர்கூட இவ்வாறு பாஸ் மென்டாலிட்டியுடன் நடந்துகொள்வார். இதுபோன்ற அணுகுமுறை முதலாளிகளிடம் மட்டுமே இருக்கும் என சிலர் தவறாக நினைப்பர். ஆனால் இது யாருக்கு வேண்டுமானாலும் இருக்க வாய்ப்புள்ளது. பாஸ் மென்டாலிட்டி உடையவர்களின் குணாதிசயங்கள் சிலவற்றையும் அவர்களைக் கையாள்வது எப்படி என்பதையும் பார்ப்போமா?

பாஸ் மென்டாலிட்டி பிரியர்களைத் திருப்திபடுத்துவது சுலபமல்ல. ஒரு வேலையை 99.99 சதவீதம் சரியாகச் செய்தாலும் மீதம் உள்ள 0.01 சதவீத வேலையை ஏன் ஒழுங்காகச் செய்யவில்லை எனக் கேட்பது இவர்களின் குணாதிசயம். இதற்கு உதாரணமாக மேலை நாட்டு குட்டிக் கதை ஒன்று கூறப்படும்.


latest tamil newsசாலையில் நடந்துசெல்லும் ஜான், நாய் ஒன்று வாயில் பை ஒன்றைக் கவ்வியபடி நடந்து செல்வதைப் பார்க்கிறார். பார்ப்பதற்கு வீட்டில் வளர்க்கப்படும் போஷாக்கான நாய்போல இருப்பதால் அதன் செயலைக் கண்டு வியக்கிறார். அதனைப் பின்தொடர்ந்து சென்று அது என்ன செய்கிறது என்று கவனிக்கும் ஆவல் அவருக்கு எழுகிறது.

ஜான் நாயைப் பின்தொடர்கிறார். நாய் சாலையை சிக்னல் பார்த்து கடந்து செல்ல, ஜானும் பின்னால் செல்கிறார். நாய் தனது வழக்கமாக கடையில் துண்டு சீட்டைக் கொடுக்க, பழக்கப்பட்ட கடை உரிமையாளர் அதனை வாங்கிப் பார்க்கிறார். அதில் உள்ள மளிகை சாமான்களை நாயின் பையில் போட்டு நாயிடம் கொடுத்துவிட்டு கணக்கு எழுதிக் கொள்கிறார்.

நாய் அதனை வாங்கிக்கொண்டு மீண்டும் சாலையைக் கடந்து ஒரு தெருவுக்குள் நடந்து செல்கிறது. நாயின் புத்திக்கூர்மையைக் கண்டு ஆச்சரியத்துடன் அதனைப் பின்தொடர்ந்து அந்தத் தெருவுக்குள் செல்லும் ஜான், நாய் ஒரு வீட்டின் முன் கேட்-ஐ திறப்பதைக் காண்கிறார். நாய் கதவைத் தட்ட, எஜமானர் கதவைத் திறக்கிறார்.

வாசல் கேட் தாழ் மூடப்படாமல் இருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த எஜமானர் கோபத்தில் சத்தம் போடுகிறார். 'இவ்வளவு அஜாக்கிரதையாகவா இருப்பாய்..! வரும்போது வாசல் கேட்-ஐ ஏன் தாழ்ப்போடவில்லை? என்ன பயிற்சி எடுத்தாயோ..!' என நாயிடம் எஜமானர் குரைக்க, நாய் வாயடைத்துப் போகிறது. இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஜானுக்கு தலைசுற்றல் ஏற்படுகிறது.


latest tamil newsநம்மில் பெரும்பாலானோர் 'பாஸ் மென்டாலிட்டி' கொண்டவர்களிடம் இந்த நாய் செய்ததுபோல சிறு தவறுக்காக திட்டு வாங்கி இருப்போம். பத்து விஷயங்களை செய்யச் சொன்னால் அதில் எட்டு விஷயத்தை சரியாகச் செய்து இருப்போம். இரண்டு விஷயத்தை தவறாகச் செய்து இருப்போம். ஆனால் சரியாகச் செய்த எட்டு விஷயங்கள் பாஸ் கண்ணில் படவேபடாது. மீதம் உள்ள இரண்டு விஷயத்தை ஏன் சரியாகச் செய்யவில்லை என்றே கேட்பார்.

சரி..! பாஸ் மென்டாலிட்டி காரணமாக நாம் கஷ்டம் மட்டுமே அனுபவிக்கிறோமா என்று கேட்டால் இல்லை. இவர்களின் இந்த மென்டாலிட்டி ஒரு வகையில் நமது சுய முன்னேற்றத்துக்கு உதவும். திரும்பத் திரும்ப இந்த 10 விஷயங்களைத் தொடர்ந்து செய்யும்போது நாளடையில் அனைத்தையும் சரியாகச் செய்யும் ஆற்றல் நமக்கு வந்துவிடும். இதனால் நாம் பணியாற்றும் அலுவலகத்தில் நாம் தவிர்க்க முடியாத ஊழியராக மாற, பாஸ் மென்டாலிட்டி பிரியர்களே மறைமுகமாக உதவுகின்றனர் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
28-செப்-202206:29:29 IST Report Abuse
D.Ambujavalli வீட்டில், ஆயிரம்தான் பார்த்துப்பார்த்து செய்தாலும் குறைகாணும் மாமியார், கணவர் கூட இந்த வகையில் சேர்க்கலாம் கன்னடத்தில் ஒரு பழமொழி உண்டு 'வேண்டாத மருமகளானால் தயிரில் கல் சிக்கும் தயிரில் எப்படி அத்தை கல் வரும் என்றால், உப்புக்கல்லை பொடிசெய்யாமல் போட்டால் வாயில் சிக்குகிறது ' என்பாராம் மாமியார்
Rate this:
Cancel
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
27-செப்-202222:20:35 IST Report Abuse
Kalyan Singapore எனக்கு இந்தியாவில் கொச்சியில் பணி புரியும் பொது நேர்ந்த அனுபவம்: ஒரு நாள் எங்கள் அலுவலகத்தில் (அப்போதெல்லாம் மொபைல் கிடையாது ) என் மேலாளரின் காரியதரிசியின் மேஜையிலுள்ள தொலைபேசி விடாமல் அடித்துக்கொண்டிருந்தது. காரியதரிசி அவசர வேலையாக வெளியில் சென்றதால் நான் அந்த தொலைபேசியை எடுத்தேன். என் மேலாளர் தான் " விஜயன் (காரியதரிசியின் பெயர்) " நான் " ஐயா இது விஜயன் இல்லை. கல்யாண சுந்தரம் " என்றேன் ." "விஜயன் எங்கே? " என்கிறார் மேலதிகாரி " "அவசரமாக வெளியே சென்றிருக்கிறார்" என்றேன் நான். அவரோ பாஸ் மெண்டாலிட்டியில் " பின் நீ எதற்காக தொலைபேசியை எடுத்தாய்? " என்கிறாரே பார்க்கலாம் . உடனே நான் " மன்னிக்க வேண்டும் ஐயா " என்று கூறி தொலைபேசியை துண்டித்து விட்டேன் . அன்று நாள் முழுதும் அந்த தொலைபேசி விடாமல் அடித்து கொண்டிருந்தது. என் மேஜையில் இல்லாததால் நான் எடுக்கவே இல்லை . அடுத்தநாள் அலுவலகம் வந்த காரிய தரிசி (அவர் தொழிலாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகிப்பவர் ) விவரம் அறிந்து அந்த மேலாளரை விடு விடு வென்று விட்டார் . அதற்கு பிறகே என் மேலாளர் தன போக்கை என்னிடம் சிறிதளவு மாற்றிக்கொண்டார்.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
27-செப்-202218:43:09 IST Report Abuse
NicoleThomson அட போங்க பத்தில் எட்டு அமெரிக்கக்காரனுக்கு இது இருப்பதாக நான் நினைப்பேன் அது என்னமோ நான் மென்பொருள் நிறுவனத்தில் பனி புரிகையில் எனது இமைல்களுக்கு மாத்திரம் எரிச்சல் இல்லாமல் பதில் வருவதாக எனது தோழிகள் சொல்லுவார்கள் , ஒரு முறை இந்த பாஸ் மெண்டாலிட்டியில் மெக்சிகோகாரன் நடந்து கொள்ள திட்டிய திட்டில் வாயை மூடிக்கொண்டிருந்தான் அப்போது நான் பயன்படுத்திய வார்த்தை பதம் இந்த பாஸ் மெண்டாலிட்டி ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X