சிவசேனா யாருக்கு சொந்தம் ?: தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி-'உண்மையான சிவசேனா கட்சி யாருக்கு சொந்தம் என்பது குறித்து உடனடியாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது' என, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இரு அணிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ' எங்களைத் தான் உண்மையான சிவசேனா என அறிவிக்க
Uddhav Thackeray, Supreme Court, Shiv Sena, சிவசேனா, ஏக்நாத் ஷிண்டே, உச்சநீதிமன்றம், உத்தவ் தாக்கரே, Supreme Court, Thackeray, Eknath Shinde,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-'உண்மையான சிவசேனா கட்சி யாருக்கு சொந்தம் என்பது குறித்து உடனடியாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது' என, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.

மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இரு அணிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ' எங்களைத் தான் உண்மையான சிவசேனா என அறிவிக்க வேண்டும்' என, ஏக்நாத் ஷிண்டே தரப்பு, தலைமை தேர்தல் ஆணையத்தில் சில ஆவணங்களை தாக்கல் செய்து மனு அளித்தது.


latest tamil news



இந்நிலையில், உத்தவ் தாக்கரே தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்ட தாவது:சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான மனு, நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.எனவே, அதில் உத்தரவு வரும் வரை, சிவசேனா யாருக்கு சொந்தம் என்பது குறித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை அப்போதைய தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க தடை விதித்தது. உத்தவ் தரப்பு ஆவணங்களை சமர்பிக்க உத்தரவிட்டது.
பின்இந்த வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. இன்று நடந்த விசாரணையில், மொத்தம் 55 சிவசேனா எம்.எல்.ஏ.க்களில் ஷிண்டே தரப்பிற்கு 40 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து உத்தவ் தரப்பிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Fastrack - Redmond,இந்தியா
28-செப்-202206:39:54 IST Report Abuse
Fastrack சரத்பவாரோட சம்மந்தம் வெச்சா பத்மாசுரன் வரம் மாதிரி ..
Rate this:
Cancel
அருண்குமார் , சென்னை உள்ளதும் போச்சா..
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
27-செப்-202222:05:01 IST Report Abuse
Siva தாக்கரே சிங்கம்.. உத்தவ் சிறு நரி. அனுபவித்து தான் ஆகணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X