தசை நார் சிதைவு நோயால் மாணவர் பாதிப்பு: பெற்றோர் கவலை

Added : செப் 27, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுக்கோட்டை;ஆலங்குடியில் தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவருக்கு தமிழக அரசு சார்பில் உதவிகள் வழங்க பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கல்லலாங்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜா(49) இவரது மனைவி கவிதா(40) இவர்களுக்கு கோபிநாத்(20) என்ற ஒரு மகனும், ஒரு மகள் உள்ளனர். இதில், தங்களுடைய மகன் கோபிநாத் தசை நார் சிதைவு நோய்க்கு ஆளாகி
 தசை நார் சிதைவு நோயால் மாணவர் பாதிப்பு: பெற்றோர் கவலை

புதுக்கோட்டை;ஆலங்குடியில் தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவருக்கு தமிழக அரசு சார்பில் உதவிகள் வழங்க பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கல்லலாங்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜா(49) இவரது மனைவி கவிதா(40) இவர்களுக்கு கோபிநாத்(20) என்ற ஒரு மகனும், ஒரு மகள் உள்ளனர். இதில், தங்களுடைய மகன் கோபிநாத் தசை நார் சிதைவு நோய்க்கு ஆளாகி நிற்கவும் முடியாமல், உட்காரவும் முடியாமல் தவிப்பதைப் பார்த்து பெற்றோர் தினந்தோறும் வேதனைக்குள்ளாகி வருகின்றனர்.


கை, கால்களை கட்டிப் போட்டது போல், உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் துயரத்தை அளிப்பது தசை நார் சிதைவு நோயாகும். பிறந்த சில ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் இருப்பதுபோல் தோன்றும் குழந்தைகள் வளர, வளர இந்நோயும் அவர்களுடன் சேர்ந்தே வளரும். இவ்வாறான நோய்க்கு கோபிநாத் ஆளாகி 10 ஆண்டுகள் அதன்பிடியில் சிக்கி தினமும் வேதனையை அனுபவித்து வருகின்றனர்.


தொடர்ந்து, கோபிநாத்தை பாதுகாப்பது, பராமரிப்பதை மட்டுமே பெற்றோர் செய்து வருகிறனர். பல முயற்சி எடுத்தபோதும் நோய் தீருவதற்கான வாய்ப்பில்லாமல் போனது. மருத்துவர்களுக்கும் நோயைத் தீர்ப்பதற்கான வழி தெரியவில்லை என்று கூறி விட்டனர். கோபிநாத்திற்க்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, மாதம் தோறும் ரூ2000 வழங்கி வருகிறது. இது தவிர, சிகிச்சைக்கான வழியை ஏற்படுத்தி கொடுக்கவில்லை என்பது பெற்றோரின் குற்றச்சாட்டாகும்.


மேலும், வெளியுலகம் தெரியாமல் போனது இவருக்கு மட்டுமல்ல, ஈன்றெடுத்த பெற்றோருக்கும் தான். குடும்ப வறுமை ஒருபுறம், நோய்ப் பிடியில் தவிக்கின்றனர். இவருக்கு தமிழகம் உட்பட வெளி மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் பலனில்லை, தமிழகத்தில் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் இந்நோய்க்கு சிகிச்சை அளிக்க மறுக்கின்றனர்.


இவ்வாறான நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில், செவிலியர்கள், பிசியோதெரபிஸ்டுகள் நேரடியாக வந்து சிகிச்சை அளிக்க வேண்டும். கோபிநாத் கடந்த 2020ஆண்டு நீட் தேர்வில் மாற்றுதினாளிகளில் பிரிவில் 246 மதிபெண்பெற்று மருத்துவம் படிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.


தற்போது, தொலைதுtர கல்வியில் பி.ஏ., 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு நோய்தாக்கம் மேலும், அதிகாரிக்காமல் இருக்க மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாதம் தோறும் ரூ33500 மதிப்புள்ள மருந்துகள் வாங்கி உட்கொள்ள வேண்டும். இந்த தசை நார் சிதைவு நோயாக்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்க வில்லை என கூறப்படுகிறது.

எனவே, கோபிநாத்திற்கு மருத்துவ சிகிச்சைக்காக தமிழக அரசு சார்பில் உதவிகள் வழங்க பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்ட கோபிநாத் கூறியதாவது:என்னை போல சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் ஒவ்வொரு மாநிலத்திலும் தசை நார் சிதைவு நோய் கண்டறியும் மையம் உருவாக்கப்பட வேண்டும். நோயாளிகளுக்கு உதவும் கருவிகளை இலவசமாக வழங்க வேண்டும். வெளிநாட்டு அதிநவீன சிகிச்சைக்கு தேவையான வாய்ப்புகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். உயிர் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அலட்சியம் காட்டாமல் அவர்கள் வாழும் காலம் வரை சிறப்பு சக்கர நாற்காலிகள், உதவித் தொகை, விசேஷப்படுக்கைகள், உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும். இங்குள்ள அமைச்சர்களும் தமிழக முதல்வர் கவனத்துக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-செப்-202222:17:37 IST Report Abuse
அநாமதேயம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் சென்று விண்ணப்பம் செய்து சக்கர நாற்காலி அல்லது பேட்டரி மால் இயங்கூடிய சக்கர நாற்காலி இலவசமாக பெறலாம். மாற்று திறனாளி அலவன்ஸ் ஆயிரம் ரூபாய் மற்றும் பிஸியேதெரப்பி சிகிச்சை கிடைக்கும்
Rate this:
Cancel
swamy - chennai,இந்தியா
27-செப்-202221:08:48 IST Report Abuse
swamy Itharku theervu sidhar ka thanikachlam iya mattume.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X